செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி, மே.23-

சுப்ரீம் கோர்ட்டுக்கு 4 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளர்.

சுப்ரீம் கோர்ட்டின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 31. ஆனால் தற்போது வரை 27 நீதிபதிகளுடன் மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்கி வந்தது.

இந்நிலையில் ஜார்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி போபண்ணா, இமாசல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், மும்பை ஐகோர்ட் நீதிபதி கவாய் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலீஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அனிருத்தா போஸ், போபண்ணா ஆகியோரின் பெயர்களை மத்திய அரசு நிராகரித்தது.

இந்நிலையில் மீண்டும் அதே 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்தது. தற்போது அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மேலும் இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்து உள்ளார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து நீதிபதிகளின் இடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *