செய்திகள்

சீனாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா:நேற்று ஒரே நாளில் 31,454 பேருக்கு பாதிப்பு

பீஜிங், நவ. 24–

சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் அடைந்து, இதுவரை இல்லாத அளவாக நேற்று மட்டும் 31,454 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் முதல் முறையாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் பல நாடுகள் சீரழிந்தது. லட்சக்கணக்கானோர் பலியானார்கள். உலகம் முழுவதும் மூன்று அலைகள் ஏற்பட்ட போதிலும், கடுமையான பொது முடக்கத்தின் காரணமாக, சீனா மட்டும் பெரும் பாதிப்பிலிருந்து தப்பித்தது.

ஒருநாள் பாதிப்பில் உச்சம்

இந்நிலையில், அண்மை காலமாக சீனாவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது. நேற்று ஒரே நாளில் 31,454 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து சீனாவில் இதுவே ஒருநாளில் ஏற்பட்ட அதிக அளவு தொற்று பாதிப்பாகும். தொடர்ந்து, பல்வேறு மாகாணங்களில் ஊரடங்கு, போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு தீவிர கொரோனா பரிசோதனையில் சீன மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *