செய்திகள் வர்த்தகம்

புதிய விவோ எக்ஸ் 70 புரோ, எக்ஸ் 70 புரோ பிளஸ் அறிமுகம்

சென்னை, அக். 1–

உலகப் பிரபல நிறுவனமான விவோ, புதிய எக்ஸ்70 ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.

சிறந்த புகைப்பட அனுபவத்தை வழங்கும் இந்த புதிய எக்ஸ்70 புரோ மற்றும் எக்ஸ்70 புரோ பிளஸ் ஸ்மார்ட் போன்களில் அல்ட்ரா-–சென்சிங் மற்றும் நவீன இமேஜிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது. துல்லியமான புகைப்படத்திற்கான உலக அளவில் ஆப்டிக்ஸ் மற்றும் ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய ஸ்மார்ட்போனை விவோ அறிமுகம் செய்துள்ளது.

5 ஜி இயங்குதளம்

விவோ எக்ஸ்70 மாடல் ஸ்மார்ட்போன் இயற்கையான தோற்றத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டதாகும். இதில் 32 எம்பி முன்புற கேமராவும் 50 எம்பி, 48 எம்பி இத்துடன் 12 எம்பி புரோ பிளஸ், 8 எம்பி என 4 பின்புற கேமராவும் உள்ளது. இதேபோல் எக்ஸ்70 புரோ மாடலில் 50 எம்.பி. + 12 எம்பி + 12 எம்பி + 8 எம்பி என 4 பின்புற கேமராக்கள் உள்ளது.

இது ஸ்நாப்டிராகன் 888+ மற்றும் 5 ஜி இயங்குதளத்தில் செயல்படுகிறது. பிளாஷ் சார்ஜருடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் 26 நிமிடத்தில் 50% வரை சார்ஜ் ஆகும் திறன் கொண்டதாகும்.

விலை

எக்ஸ்70 புரோ பிளஸ் (12+256 ஜிபி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.79 ஆயிரத்து 990 ஆகும். இது வரும் 12ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இதேபோல் எக்ஸ்70 புரோ (8+128 ஜிபி) ரூ.46 ஆயிரத்து 990க்கும் 8+256 ஜிபி ரூ.49 ஆயிரத்து 990க்கும் மற்றும் 12+256 ஜிபி ரூ.52 ஆயிரத்து 990க்கும் வரும் 7ந் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த 2 மாடல் போன்களும் விவோ இந்தியா இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்என்று விவோ இந்தியா இயக்குனர் நிபுன் மரியா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *