செய்திகள்

சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வரை ஓயமாட்டேன்: வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி, மார்ச் 1–

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இது தொடர்பாக அடுத்தடுத்து உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்.

மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வை செய்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 218 இந்தியர்களுடன் 9வது சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டதாக கூறினார். மேலும் அங்கு சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் என்றும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.