செய்திகள் வர்த்தகம்

சர்வதேச வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா: உலக வங்கி பாராட்டு

வாஷிங்டன், ஏப்.9–

சர்வதேச அளவிலான வளர்ச்சி அதிகரிக்க, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், முக்கிய காரணிகளாக உள்ளன என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத் தொடரின் துவக்க நிகழ்ச்சியில், உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில நாடுகளில், கொரோனா தடுப்பூசி கிடைப்பதிலும், மக்களின் வருவாயிலும் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சில நாடுகளில், இந்த வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. வங்கி வட்டி விகிதங்களிலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. ஏழை நாடுகள் அதிக வட்டி விகிதங்களை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் குறைந்த அளவுக்கு, அந்நாடுகளில் குறையவில்லை. கடன் பெறுவதிலும் சமத்துவமின்மை நிலவுகிறது.

சிறு வணிகர்கள், புதிதாக தொழில் துவங்க விரும்புவோர், பெண்கள் உள்ளிட்டோர், கடன் பெறுவதில் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஐரோப்பிய நாடுகளில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தாதது மிகுந்த கவலை அளிக்கிறது. இருந்தபோதிலும், சர்வதேச வளர்ச்சியானது அதிகரித்துள்ளது. இதில், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *