வாழ்வியல்

சபரி மலை ஐயப்பன்

கண்கள் பார்க்க விரும்புவது சபரிமலை! இந்தக்
கலியுகத்தை ஆளும் தெய்வம் ஐயப்பன் !!
ஐந்து மலைக் கூட்டத்திலே அமைந்த மலை! அது
அரிஹரசுதன் ஐயப்பன் அமர்ந்த மலை!
*
மாலையணிந்து வருவோர்கள் நாடும் மலை! சரண
மந்திரங்கள் சொல்வோர்கள் கூடும் மலை!
பதினெட்டு படிகொண்ட வாயில் மலை! அது
பகவான் ஐயப்பன் கோயில் மலை!!
*
சரணகீதம் சங்கீதமாய் ஒலிக்கும் மலை! இங்கு
சரணடைந்தால் நினைத்ததெல்லாம் பலிக்கும் மலை!!
மீண்டும் மீண்டும் வருவதற்குத் தூண்டும் மலை! இது
வேண்டுவதை வழங்குகின்ற சபரி மலை!!
*
வந்தவரை வாவென்று வாழ்த்தும் மலை! அவர்
வாழ்வினிலே வரும் கவலை வீழ்த்தும் மலை!!
எந்தநிலை என்றபோதும் ஏற்கும் மலை! அது
எந்தநாளும் காக்கும் சபரி மலை!!
*
இருமுடிக் கட்டேந்திச் செல்லும் மலை! அவன்
திருவடித் தரிசனம் உள்ள மலை!!
அன்பர்கள் குறைகள் எல்லாம் சொல்லும் மலை! ஐயன்
அருளாலே அனைத்தையும் வெல்லும் மலை!!

கவிஞர் எஸ்.ராமகிருஷ்ணன்
(சிறுமுகை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *