வாழ்வியல்

சந்திரனில் நீராவி!

Spread the love

மேரிலாந்தின் கிரீன் பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு ஒன்று வியாழன் கிரகத்தின் நிலவான யூரோப்பாவின் மேற்பரப்பிற்கு மேலே நீர் நீராவியின் தடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்று Nature Astronomy பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதில் யூரோப்பாவின் மேற்பரப்பலிருந்து ஆவி நிலையில் நீர் வெளியேறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் விஞ்ஞானிகள் நீர் திரவத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் நீராவி வடிவத்தில் நீர் இருப்பதை உறுதி செய்திருப்பது அடுத்தக்கட்டம் என நாசாவின் விஞ்ஞானியான லூகாஸ் பகானினி நாசா அறிவிக்கையில் தெரிவித்துள்ளார். இதேவேளை நாசாவின் கலிலியோ விண்வெளி ஓடத்தின் உதவியுடன் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னரே ஈரோப்பாவில் மின்னைக் கடத்தக்கூடிய திரவம் ஒன்று இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

பின்னர் பெறப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டில் பகுப்பாய்வு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான நிலையில் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு குளிர்ந்த நிலவான யூரோப்பாவின் பனிக்கட்டி குறித்த தகவலை ஆய்வு செய்யும். யூரோபாவின் பனிக்கட்டி குறித்து ஆராய கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் ஒரு ரேடார் ஆகியவை இந்த விண்கலத்தில் இடம்பெறும் எனவும் நீராவி குறித்த கூடுதல் நுண்ணறிவுகளை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சிறிய விண்வெளி பாறை என்பது நாசாவின் வேற்று கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா என்ற தேடலில் அதிக முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த கண்டுபிடிப்பு அத்தியாவசியம் என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *