செய்திகள்

சட்டசபையில் வ.உ.சி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ப.சுப்பராயன் படங்கள்

சென்னை, பிப்.21

சட்டசபையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப் படங்களை 23 ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

சட்டமன்ற கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றாலும், தலைவர்களின் படங்கள் திறப்பு பாரம்பரியமிக்க பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப் படங்கள், சட்டசபையில் வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி 3 தலைவர்களின் முழு உருவப்படங்களும் சட்டசபையில் 23 ந்தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இதற்கான விழா மாலை 5 மணி அளவில் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெறுகிறது.

3 தலைவர்கள் படங்கள் திறப்பதன் மூலம் சட்டசபையில் தலைவர்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியார் ஆகிய 12 பேரின் படங்கள் ஏற்கனவே சட்டசபையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *