செய்திகள்

கோவை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவு சர்வதேச அளவில் விருதுகள் பெற்று சாதனை

கோவை, ஏப். 15 –

கோவை கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவு சர்வதே அளவில் 5 விருதுகளை பெற்று சாதனை படைத்து உள்ளது.

கொரியா தலைநகர் சியோலில் சமீபத்தில் ஆசியா பசுபிக் முதுகு தண்டுவட சங்க வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், கோவை கங்கா மருத்துவமனை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவுக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டது.

சியோலில் நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து 600க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த விருது சிறந்த ஆராய்ச்சிக்கான, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி ஆகிய இரண்டின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதில் கோவை கங்கா மருத்துவமனை முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை பிரிவுக்கு 5 விருதுகள் கிடைத்துள்ளது.

ஆராய்ச்சி கட்டுரை

புதிய மற்றும் அதிநவீன முறையில் முதுகு தண்டுவட முறிவுகளை கம்ப்யூட்டர் வழிகாட்டுதலின்படி உள்புறமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே சரி செய்யப்படக்கூடிய சிக்கலான எலும்பு முறிவுகளை தடுக்க உதவுவது குறித்து இந்த ஆராய்ச்சி கட்டுரையில் மருத்துவர் குழு தெரிவித்திருந்தது.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையில், மேம்பட்ட புரதங்கள் மற்றும் கருப்பை புரதங்கள் தொடர்பான மூலக்கூறு அறிவியல் ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வில், பெரியவர்களுக்கான மீள் உருவாக்க சிகிச்சை பயன்பாட்டிற்காக, கரு உருவாகும் சமயத்தில் அதற்கான புரதங்கள் மற்றும் உயிரியல் வழிகளை அடையாளம் காணவும் வகையில் செய்யப்பட்டுள்ளது. வட்டு குறைபாடு பிரச்சினை, பொதுவான குறைந்த முதுகு வலி பிரச்சினை ஆகியவற்றிற்கு இந்த முறையை பயன்படுத்தலாம்.

கங்கா மருத்துவமனை சமர்ப்பிப்பு

இந்த 2 ஆராய்ச்சி கட்டுரைகளும் கங்கா மருத்துவமனை டாக்டர்கள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு ஏசியன் ஸ்பைன் ஜர்னலின் சிறந்த கட்டுரைக்கான விருது கிடைத்துள்ளது.

இந்த கட்டுரைகள் இன்டர்நேஷனல் ஜர்னல் பத்திரிக்கையில் சிறந்த கட்டுரைகளாக வெளியிடப்பட உள்ளது. மருத்துவ ஆராய்ச்சி கட்டுரை, டாக்டர்கள் ராஜசேகரன், அஜோய் பிரசாத் ஷெட்டி, ரிஷி முகேஷ் கண்ணா மற்றும் திலிப் சந்த் ராஜா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு டாக்டர் திலிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை, டாக்டர்கள் ராஜசேகரன், சித்ரா தங்கவேல், ரவீந்திரன் முத்துராஜன், விஜய் ஆனந்த், திலீப் சந்த் ராஜா, ஷாரோன் மிராக்கிள் நாயகம் மற்றும் மோனிகா ஸ்டெபி மச்சாடோ ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.

அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி கட்டுரை கங்கா ஆராய்ச்சி மையத்தால் தயாரிக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி துறையால் அங்கீகரிக்கப்பட்டு, குறைந்த முதுகு வலிக்கான மூலக்கூறு தீர்வுகள் இந்த கட்டுரையில் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *