செய்திகள்

கோவையில் தொடரும் சோகம்: 3 வயது பெண் யானை மர்ம பலி

கோவை, ஏப். 15–

சிறுமுகை அருகே மர்மமான முறையில் உயிரிழந்த 3 வயது பெண் யானை குட்டி சடலத்தை மீட்ட வனத்துறையினர் மருத்துவர்கள் தலைமையில் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் உள்ள சிறுமலை வனச்சரகத்தில் நேற்று மாலை உளியூர் பீட் (நீலகிரி கிழக்கு சரிவு காப்புக் காடு), பெத்திகுட்டை பிரிவு, சிறுமுகை சரக வரம்பில் உள்ள சோளமாதேவி சரகப் பகுதியில் வனக்காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது யானை ஒன்று படுத்து இருந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, அந்த யானை உயிரிழந்திருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வில், இறந்தது பெண் யானை என்றும் அதற்கு வயது சுமார் 3 என்றும் கண்டறியப்பட்டது. ஆனால், வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை சோதனை செய்து பார்த்தபோது அதன் உடலில் எந்த காயங்களும் இல்லை.

இன்று காலை வனத்துறை கால்நடை மருத்துவர் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *