செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு; சமபந்தி விருந்து: எடப்பாடி, அமைச்சர்கள் பங்கேற்பு

Spread the love

சென்னை, ஆக.14–

அறநிலையத்துறை சார்பில் சுதந்திரத் தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்திய சுதந்திரத் திருநாள் அன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி நிதி வசதி மிக்க திருக்கோயில்களில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 15–ம் நாள் 448 திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் சேவார்த்திகளுக்கு திருக்கோயில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன.

மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் மாவட்ட கலெக்டர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

மேலும் சென்னை பெருநகரப் பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சபாநாயகர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

சுதந்திர தின விழா அன்று திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் விவரம் வருமாறு:–

சென்னை கே.கே.நகரில் எடப்பாடி பங்கேற்பு

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் – சபாநாயகர் ப.தனபால்

கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயில் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயில் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிசுவாமி கோயில் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன்

அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயில் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

தம்புசெட்டித்தெரு காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் கோயில் – அமைச்சர் பி.தங்கமணி

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ராயப்பேட்டை சித்தி புத்தி விநாயகர் (ம) சுந்தரேஸ்வரர் கோயில் – அமைச்சர் டி.ஜெயக்குமார்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில் – அமைச்சர் சி.வி.சண்முகம்

தங்கசாலைத்தெரு ஏகாம்பரேசுவரர் கோயில் – அமைச்சர் கே.பி.அன்பழகன்

வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில் – அமைச்சர் வி.சரோஜா

மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில் – அமைச்சர் எம்.சி.சம்பத்

வில்லிவாக்கம் சௌமிய தாமோதரப்பெருமாள் கோயில் – அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் – அமைச்சர் ஆர்.காமராஜ்

பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயில் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

கீழ்ப்பாக்கம் பாதாளபொன்னியம்மன் கோயில் – அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

பூங்கா நகர் கந்தசாமி (எ) முத்துக்குமாரசுவாமி கோயில் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சிந்தாதரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் – ஆதிகேசவப் பெருமாள் கோயில் – அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு

அரண்மனைக்காரன் தெரு கச்சாலீசுவரர் கோயில் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

வடபழநி ஆண்டவர் கோயில் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

தேவராஜ முதலி தெரு சென்னமல்லீஸ்வரர் – சென்னகேசவப் பெருமாள் கோயில் –அமைச்சர் கே.சி.வீரமணி

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி

மேற்கு தாம்பரம் செல்வ விநாயகர் – கோதண்டராமர் கோயில் – அமைச்சர் பி.பெஞ்சமின்

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி

பாடி திருவல்லீஸ்வரர் கோயில் – அமைச்சர் கே.பாண்டிய ராஜன்

அமைந்தகரை ஏகாம்பரரேஸ்வரர் கோயில் – அமைச்சர் ஜி.பாஸ்கரன்

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் – சேவூர் எஸ். ராமசந்திரன்

பள்ளியப்பன் தெரு அருணாச்சலேசுவரர் கோயில் – அமைச்சர் எஸ்.வளர்மதி

அயன்புரம் பரசுராம லிங்கேஸ்வரர் கோயில் – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன்

திருவட்டீஸ்வரன் பேட்டை திருவட்டீஸ்வரர் கோயில் – தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *