செய்திகள்

‘கொரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வைரஸ் தடுப்பு நவீன வசதிகள்; ஆறு கட்ட பாதுகாப்பு செயல் திட்டத்தில் ‘மதுரை மீனாட்சி மிஷன்’

‘கொரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வைரஸ் தடுப்பு நவீன வசதிகள்;

ஆறு கட்ட பாதுகாப்பு செயல் திட்டத்தில் ‘மதுரை மீனாட்சி மிஷன்’

மருத்துவமனை தலைவர் டாக்டர். எஸ்.குருசங்கர் பெருமிதம்

மதுரை, ஆக.18–

ஒருவர் கொரோனா வைரஸ் பாதித்திருப்பவரா… என்பதை அவர்களை தொடாமலேயே கண்டறிவதுமருத்துவமனை வளாகம் முழுவதையும் கிருமி நாசினி கொண்டு தூய்மையாக வைத்திருப்பது, நோயாளிகளையும், மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்களையும் அவசியம் என்று உணரும்பட்சத்தில் மட்டுமே தொட்டு சிகிச்சை அளித்தல்… இப்படி ஆறு கட்ட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, மதுரையில் பிரபல தனியார் மருத்துவமனையான ‘மீனாட்சி மிஷன்’ மருத்துவமனை.

இதன் காரணமாக இந்தியாவிலேயே கொரோனா தொற்றுக்கு எதிராக அதிகப் பாதுகாப்புள்ள மருத்துவமனை என்ற பெருமைக்குரிய மருத்துவமனையாக இது உருவெடுத்திருக்கிறது என்று தலைவர் எஸ்.குருசங்கர் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

தற்போது, சொந்தமாகவே என்–95 முகக்கவசங்களை தயாரிக்கிற ஒரே மருத்துவமனையாகவும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை திகழ்கிறது.

ஆபரேஷன் தியேட்டர்களில் பணியாற்றுகிற மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு முகப்பு மூடி (hood) வழியாக காற்றை பாதுகாப்பாக வழங்குவதற்கு தஞ்சாவூர் காற்று தடை செயல் உத்தி (TABT) என அழைக்கப்படும் ஒரு செயல் திட்டத்தையும் நடத்தி வருகிறது. இம்மருத்துவமனையின் மற்றொரு மேம்பட்ட கண்டுபிடிப்பு– இதன் ப்ளூடூத் ஸ்டெதாஸ்கோப்; நோயாளி வேறொரு அறையில் அமர வைக்கப்பட்டிருக்கும்போது கூட, தொடாமலேயே அவர்களின் உடலுறுப்புகள் செயல்பாட்டை மருத்துவர்கள் கண்டறிய முடியும் என்றார் அவர்.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்துகிற எங்கள் மருத்துவமனை

எங்கெல்லாம் சாத்தியமிருக்கிறதோ அங்கு இத்தகைய முறையில் தொடர்புகளே இல்லாமல் பரிசோதனை செய்யவும் சிகிச்சை வழங்கவும் வகை செய்கிறது என்றார். அறைகளில் தங்கி இருக்கும் நோயாளிகளுக்கு ‘ரோபோக்களே’ போய் உணவு வழங்கும் என்பதும் மருத்துவமனையின் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *