செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆலோசனை

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:

அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் ஆலோசனை

ஆவடி, மே 24

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில், மாவட்ட அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடுகள் கலந்தாய்வுக் கூட்டம் ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் கே. பாஸ்கரன் கண்காணிப்பு அலுவலர் காவல்துறை தலைவர் (இரயில்வே) வி.வனிதா மற்றும் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்க் கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மின்னணு திரை வாயிலாக விரிவாக எடுத்துரைத்தார். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளதையும், கட்டுபாட்டு பகுதிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பகுதியாக உள்ளதையும், 38 ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு தற்காலிக முகாம்களில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது குறித்தும், வடமாநில தொழிலாளர்கள் அவர்கள் தம் சொந்த ஊர்களுக்கு செல்ல மேற்க்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் பென்ஜமின், க.பாண்டியராஜன், அனைத்து பணிகளையும் விரைவாக மேற்க்கொள்ளவும், மேலும் நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அனைத்து அலுவலர்களையும் அறிவுறித்தினார்கள். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் அலுவலர்கள் பணிகளை திறம்பட மேற்க்கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி. அலெக்சாண்டர், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *