செய்திகள்

கொரோனா குறித்த விழிப்புணர்வை கல்லூரி மாணவர்கள் வழியாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்

கொரோனா குறித்த விழிப்புணர்வை 

கல்லூரி மாணவர்கள் வழியாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

 

மதுரை,மே.26–

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியினை வருவாய் போிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

அமைச்சர் பேசுகையில்:–

சமுதாய பங்களிப்பு என்ற வகையில் மாணவர்களை விழிப்பணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதோடு முதலில் அவர்களை தயார் செய்கின்ற வகையில் காணொலி காட்சி மூலம் மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் மற்றும் செல்லமுத்து அறக்கட்டளை ஈடுப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 5000 மாணவர்கள் தன்னம்பிக்கை, விழிப்புணர்வு கொண்டவர்களாக, சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களாக இன்றைக்கு காணொலி காட்சி மூலமாக தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் கல்லூரிகளில் பயிலும் 552 மாணவர்-மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 5000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட அவர்கள் மாணவர்கள் சமுதாயத்திற்கும் முழுமையான அறிதல், புறிதல், அரசு கொடக்கின்ற விழிப்புணர்வை கொண்ட செல்வது மற்றும் திட்டங்கனை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, பேரிடர் காலங்களில் சமுதாய பங்களிப்போடு இன்றைக்கு சேவை செய்கின்ற இந்த முயற்சி ஒரு மயில்கல்லாக அமைந்திருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மருத்து வள்ளுநர்கள் மாணவர்களிடம் எடுத்துறைப்பார்கள். மாணவர்களுக்கு தடுப்பு நடவடிக்கையில் எதை செய்ய வேண்டம் என்று சம்மந்தப்பட்ட வள்ளுநர்கள் எடத்துரைப்பார்கள். ஆதற்கு உண்டான பயிற்சியும் காணொளி காட்சி மூலம் வழங்குவார்கள். பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்று வழங்கப்படும். சான்று பெற்ற மாணவர்கள் கொரோனா வைரஸ் பற்றி முழுமையான புரிதலோடு இருப்பார்கள். சமுக இடைவெளி, கை கழுவும் பழக்கம், கிருமி நாசினி தௌித்தல் போன்ற முக்கியத்துவத்தை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்க உதவும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மரு.டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் எஸ்..விசாகன், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், அரசு ராசாசி மருத்துவமனை முதல்வர் சங்குமணி, மன நல மருத்துவர் மரு.இராமசுப்பிரமணியன், பேராசிரியர் கண்ணன் ஆகியோர் உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *