வர்த்தகம்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு பஸ், ரெயில், ஷேர் ஆட்டோவில் செல்லாமல் சொந்த கார் வாங்க மக்கள் பேரார்வம்

கொரோனா ஊரடங்குக்கு பிறகு பஸ், ரெயில், ஷேர் ஆட்டோவில் செல்லாமல் சொந்த கார் வாங்க மக்கள் பேரார்வம்

டாடா மோட்டார்ஸ் ஆய்வில் தகவல்

சென்னை, செப். 15

கொரோனா ஊரடங்குக்கு பிறகு சமூக விலகல் காரணமாக பஸ், ரெயில், ஷேர் ஆட்டோவில் அலுவலகம் செல்வதை செல்வோரும் விரும்பவில்லை. காற்றின் மூலம் கொரோனா பரவுவதால் இரு சக்கர வாகனங்களை விட, சொந்தமாக கார் வாங்கி ஓட்டிச் செல்ல விரும்புகின்றனர். இதற்காக டாடா மோட்டார்ஸ் பல்வேறு ரக தவணைக் கடனில் கார்களை விற்பனை செய்கிறது. ஆன்லைனிலும் விற்பனையை துவக்கியுள்ளது.

வீட்டிலிருந்து கார் வாங்லாம். வீட்டிலேயே டெலிவரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இது நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்று மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

சமூக இடைவெளியானது, கொரோனா வைரசுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு செயல்முறையாக இருப்பதால், உலகெங்கிலும் உள்ள அரசாங்க வாகனத்திற்கான பயணிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, பொது போக்குவரத்து மற்றும் சவாரி-பகிர்வு நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளன. ஊரடங்கின் போது பெரும்பான்மையினருக்கான பயணம் ஸ்தம்பித்துள்ளது. மக்கள் எப்போது பயணிப்பது என்பது குறித்து தீர்வு இல்லாமல் இருந்தனர். மேலும் பலர் தொடர்பைக் குறைக்க மாற்றங்களைச் செய்கின்றனர். பொது போக்குவரத்தில் மக்கள் தயக்கம் காட்டுவதால், தனிப்பட்ட போக்குவரத்தைச் சார்ந்துள்ளது தொடர்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடுமையான சமூக இடைவெளி விதிமுறைகளின் தாக்கம் காரணமாக, பொது போக்குவரத்து மற்றும் ஷேர் ஆட்டோ ஆகியவற்றின் பயன்பாட்டில் கணிசமான குறைவு ஏற்படும். அமெரிக்கா, சீனா, மேற்கு ஐரோப்பாவில் 60% வரை, பொது போக்குவரத்தை குறைவாகவோ அல்லது அடிக்கடி பயன்படுத்துதை குறைப்பதாகவே ஆய்வில் தெரிவித்துள்ளனர் . நடந்து செல்லுதல், பைக்கில் செல்லுதல் அல்லது தங்கள் சொந்த காரை ஓட்டுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, தனிப்பட்ட இயக்கத்தின் தேவை அதிகரிக்கும். வாடகை சவாரி மற்றும் கார் பகிர்வு போன்ற பிற முறைகளும் குறைவாகவே பயன்படுத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக கார்களை விற்பனை செய்வதற்கும் தேவையை அதிகரிக்க ஆன்லைன்- வசதியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் வசதி மற்றும் பாதுகாப்பிலிருந்த படியே, தங்கள் கார்களை தேர்வு செய்து வாங்க அனுமதிக்கும் பல்வேறு ஆன்லைன் விற்பனை தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் டீலர் ஷோரூமில் கூட்டத்தை குறைக்கவும் உதவுகிறது.

இது பற்றி அறிய www.tatamotors.com வலைதளத்தைப் பார்க்கலாம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *