செய்திகள்

கைதை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மனு: அவசர வழக்காக இன்று விசாரணை

புதுடெல்லி, பிப்.28–

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிரடியாக கைது செய்தது.

விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரான நிலையில் அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிசோடியாவை வரும் 4-ம் தேதி வரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவன்யூ சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா தற்போது சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் இன்று மாலை விசாரணை நடத்த உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *