போஸ்டர் செய்தி

கேரளாவில் கனமழையால் நிலச்சரிவு: 16 பேர் உயிரிழப்பு

கண்ணூர்,ஆக.9–

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர். கேரளா-,கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக எல்லைப்பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நேற்றும், இன்றும் கேரளாவில் 16 பேர் பலியாகி உள்ளனர். இடுக்கி மாவட்டத்தில் 10 பேரும், மலப்புரத்தில் 5 பேரும், வயநாட்டில் ஒருவரும் என்று மொத்தம் 16 பேர் இறந்துள்ளனர்.

அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல் மற்றும் கனிச்சார் பஞ்சாயத்துக்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சப்பரபடவு கப்பிமலை உள்ளிட்ட பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை நீடிப்பதால் தலிபரம்பா இரிட்டி தாலுகாக்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. எனினும், மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மேம்பாட்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அய்யங்கண்ணு பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழங்கணம் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி தாமஸ் மற்றும் அவரது மருமகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டிற்குள் இருந்தபோது, நிலச்சரிவு காரணமாக வீட்டின் சிலாப் இடிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் இறந்துவிட்டனர். பின்னர் உடல்கள் மீட்கப்பட்டு இரிட்டி தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *