செய்திகள்

கொரோனா பரிசோதனை குறைக்க கூடாது: 13 மாநில அரசுகளுக்கு இந்திய அரசு கடிதம்

டெல்லி, நவ. 25–

கொரோனா பரிசோதனைகளை குறைக்க கூடாது என்று 13 மாநிலங்களுக்கு இந்திய ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாகலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரா, கேரளா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை என இந்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

குறைக்கக் கூடாது

அக்கடிதத்தில், “கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், உண்மையான தொற்று நிலவரத்தை கணிக்க முடியாது. குளிர் காலம் தொடங்கியுள்ளது, அதேபோல் ஒரு சில மாநிலங்களில் காற்று மாசுபாடும் அதிகமாக இருக்கிறது. இதனால், இயல்பாகவே மக்கள் சுவாசப்பாதை தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் கொரோனா பரிசோதனைகளை மாநிலங்கள் அக்கறையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “வளர்ந்த மேலை நாடுகள் சிலவற்றில் கொரோனா 4 வது, 5 வது அலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ச்சியான அதிக அளவிலான பரிசோதனைகளை இங்கு நாம் மேற்கொண்டால் தான் கொரோனா தொற்றின் வீரியத்தின் போக்கை அறிய முடியும் என்று ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *