சிறுகதை

குடிக்காதே | ராஜா செல்லமுத்து

அன்பும் பாசமும் நிறைந்து வழியும் ஒரு சின்ன குடும்பம். தேன்மொழி குடும்பத்தலைவி. சீனிவாசன் குடும்பத்தலைவன். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

கிராமத்தில் பிறந்தவர்கள். சீனிவாசனுக்கு நகரத்தில் சென்னையில் அரசாங்க வேலை என்பதால் இடமாறுதல் அளிக்கப்படுகிறது. கிராமத்தில் இருந்து சென்னைக்கு ட்ரான்ஸ்பர் ஆகி வருகிறது, சீனிவாசன் குடும்பம். உடன் மனைவி குழந்தைகளையும் அழைத்து வருகிறான். வாடகை வீடு பார்த்து தங்குகிறார்கள்.

அந்த கிராமத்தில் இருந்து வந்தவர்களுக்கு சென்னை ஒரு பிரம்மாண்டமாக தெரிகிறது. தேன்மொழிக்கு, நகரம் வியப்பை விதைக்கிறது. சென்னையின் அழகை உச்சு கொட்டாமல் பார்க்கிறாள் தேன்மொழி.

நகரத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள் குழந்தைகள். புது அலுவலகம், சுற்றுச்சூழல் என்று சீனிவாசனுக்கும் அந்த கிராம வாழ்க்கை கொஞ்சம் அந்நியப்படுகிறது.

சீனிவாசன் அலுவலகத்தில் புதிதாக நண்பர்கள் சேர்கிறார்கள். பெண் நண்பர்களும் இருக்கிறார்கள். கிராமத்தில் இருக்கும் போது கொஞ்சம் கூட குடிக்காமல் இருக்கும் சீனிவாசன் நகரத்திற்கு வந்த பிறகு நண்பருடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார். பார்டிக்கு போகிறான் . முதலில் ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் என்று தேன்மொழி கணவனை விட்டு விடுகிறாள்.

ஆனால் அதுவே சீனிவாசனுக்கு பழக்கமாகிறது . தினமும் அவன் அலுவலகம் முடித்து குடிக்காமல் வருவதே இல்லை . இதனால் குடும்பத்தில் சண்டை ஏற்படுகிறது. குழந்தைகளும் தேன்மொழியும் அழுதுகொண்டு ஓரிடத்தில் அமைதியாக உட்காருகிறார்கள்.

அத்தை மாமாவிடம் புகார் சொல்கிறார். சீனிவாசனின் அப்பா அம்மா அவர்களும் இனிமேல் குடிக்காதே; குடிக்கக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார்கள்.

தேன்மொழியும் தன் குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் சொல்கிறாள்.அவர்களும் சீனிவாசனைக் கண்டிக்கிறார்கள். குறைவான வருமானம் ஆக இருந்தாலும் அரசாங்க வேலை, அதுவும் வாடகை வீடு என்று குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த சின்ன இல்லத்தில் உள்ளம் நிறைய அன்பு நிறைகிறது.

சீனிவாசன் அலுவலகம் சென்றால் காய்கறிகள் வாங்குவது , பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வருவது என்று தேன்மொழி தான் வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்வதற்கு வசதியாக ஸ்கூட்டி வாங்கி வைத்துக் கொள்கிறாள்.

அப்போது தேன்மொழி உடன் படித்த ஒரு ஆண் நண்பரை சந்திக்கிறாள். தேன்மொழியின், இந்த நட்பானது கொஞ்சம் கொஞ்சமாக தொடர்கிறது. வாட்ஸ்அப், செல்போன் பேச்சு என்று கணவன் போனவுடன் இருவருக்குமான நட்பு பெருகுகிறது. இது ஒரு கட்டத்திற்கு மேல் போக தேன்மொழி தன் இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்ததை நண்பர் விமலிடம் சொல்கிறாள். விமலும் அதைக் கேட்டு தான் ஆறுதலாக இருப்பதாக சொல்கிறான். முதலில் வார்த்தைகளால் ஆரம்பித்த அந்த காதல் இப்பொழுது வீடு வரை வந்துவிடுகிறது. கணவன் அலுவலகம் போனதும் விமல் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசமாக இருக்கலாம். இதனால் தேன்மொழி முன்பு தன்னை பெரிதாக நினைத்துக் கொள்ளாதவள், இப்பொழுது தன்னை ஒரு குமரி ஆகவே கருதுகிறாள். இரண்டு பிள்ளைக்கு தாயென்று தன்னை கருதிக் கொள்வதில்லை. விமல் வந்து போகும் விஷயத்தை கணவனிடம் மறைக்கிறாள். எதுவும் நடக்காதது போல் இருக்கிறாள். பிள்ளைகளிடம் தேன்மொழி காட்டும் அன்பு குறைகிறது. சரிவர சமைப்பதில்லை. தலைவலி என்று படுத்துக் கொள்கிறாள். பிள்ளைகள் மீது எரிந்து எரிந்து விழுகிறாள். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை கணவனிடமும் அன்பு காட்ட குறைகிறது. இதனால் அவனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. முன்பு கிராமத்து பெண்ணாக இருந்த தேன்மொழி இப்போது நவீன உடைக்கு மாறி சுடிதார் போடுகிறாள்.

முடியைக் கத்தரித்துக் கொள்கிறாள். தன்னை ஒரு குமரிப் பெண்ணாகவே நினைத்துக் கொள்கிறாள். தேன்மொழி இதனால் கணவனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது .யாருடனாவது தொடர்பு இருக்குமோ? என்று வருந்துகிறான். அலுவலகம் சென்றால் கூட அவன் நிம்மதியாக வேலை செய்ய முடிவதில்லை. அவன் மனம் முழுவதும் தேன்மொழி ஏதோ தவறு செய்து கொண்டிருக்கிறாள் என்பதிலேயே மனம் வலிக்கிறது.

ஒவ்வொரு நாளும் கணவன் மனைவி நினைத்து நினைத்து வருந்துகிறான். ஒரு நாள் அலுவலகம் போகிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தவன் வீட்டில் தேன் மொழி இல்லாதது கண்டு ஆச்சரியப்படுகிறாள். அவளை தொடர்ந்து எங்கே இருக்கிறாள் என்று பார்க்கும் போது விமலின் அப்பார்ட்மெண்ட் வீட்டில் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்கிறான். இதனால் வீட்டில் தெரியாது போல் இருந்த சீனிவாசன் நிறைய குடிக்க ஆரம்பிக்கிறான்.

மனைவியை இதுபோல் தவறு செய்யக் கூடாது என்று சொல்கிறான். அவளை ஒரு முறை தான் சந்தித்தேன் அதன் பிறகு சந்திக்க வில்லை என்று பொய் சொல்கிறாள்.

ஆனால் கணவன் அதை காட்டிக்கொள்ளாமல் இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டும். தவறு செய்யக்கூடாது என்று சென்று அவர்கள் அம்மா அப்பாவிடம் புகார் செய்கிறான். அவர்களும் நம்ப மறுக்கிறார்கள் . இப்படிப் போய்க் கொண்டிருக்கும்போது கணவன் தன் நடவடிக்கை கண்டுபிடித்து விட்டான் என்று விமலிடம் சொல்கிறாள்

விமல் ,அதை கண்டுகொள்ள வேண்டாம் என்கிறான்.

கணவன் இரண்டு குழந்தைகள் சீனிவாசன் இரண்டு குழந்தைகளை வளர்த்து எடுப்பதற்காக அவளின் செய்கைகள் அத்தனையும் மன்னித்து விடுகிறான். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாதவன் அவளை கொலை செய்துவிட வேண்டும் என்றுமுடிவெடுக்கிறான். அதற்கான சந்தர்ப்பத்தை தேடுகிறான். ஆனால் அவனால் கொலை செய்ய முடியவில்லை. இரண்டு குழந்தைகள் அவர்கள் எதிர்காலம் இருப்பது, கண்டு அத்தனை அவமானங்களையும் தனக்குள்ளே பூட்டி வைத்துக் கொள்கிறான்.

ஆனால் தன் கணவன் தன்னை கொலை செய்ய வருகிறான் என்பதை தெரிந்துகொண்ட தேன்மொழி, விமலிடம் சொல்கிறாள். விமலும் அதை ஏற்றுக்கொண்டு இனிமேல் சீனிவாசன் இருந்தால் நம் காதலுக்கு இடையூராக இருக்கும் அதனால் சீனிவாசனை கொலை செய்து விடலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள். குடித்துவிட்டு வரும் சீனிவாசனை கொல்வதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள் தேன்மொழி.

தான் வீட்டுக்கு வந்து விடுவதாக சொன்ன விமல் வராமல் இருக்கிறான்.

அவன் வரவில்லை.

குழந்தைகள் இரவில் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளை நினைத்து கணவனை கொல்லும் எண்ணத்தை கைவிடுகிறாள்.

*

மறுநாள் விமலிடம் என் வரவில்லை என்கிறாள்.

அவன் மெளனமாகி நழுவி விடுகிறான்.

இதற்கிடையில் விமலுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து பார்த்து திருமணத்திற்கு சம்மதிக்கிறான். பெண் பார்த்த விஷயத்தை அவளிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறான்.

அதைத் தெரிந்து கொண்டு கேட்டபோது ….

தேன்மொழியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறான்.

தேன்மொழி ஏன் என்னைக் கெடுத்தாய் நல்ல குடும்பத்தில் தானே இருந்தேன் என்று சொல்ல விமல் அந்தப் பேச்சை மறுக்கிறான்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

விமல் வருவான் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது . விமல் அவளை ஏமாற்றி விட்டு ஓடிவிடுகிறான். அதன்பிறகு தேன்மொழி விமலை பார்ப்பதே இல்லை.

இதனால் மனமுடைந்த தேன்மொழி கட்டியவனை விட்டுவிட்டு இன்னொரு உடன் போனது தவறு என்று நினைக்கிறாள்.

*

தேன்மொழி அவளுடைய காம இச்சை எண்ணத்தை மாற்றிக்கொள்கிறாள். கடைசியில் தேன்மொழி செய்த தவற்றை நினைத்து அழுது கொண்டே திருந்துகிறாள்.

குழந்தைகளை நினைத்து சீனிவாசன் மனம் திருந்தி குடிப்பதை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

அந்த குழந்தைகள் அனாதையாக வீதியில் திரியவிடப் பார்த்தோமே என்ற எண்ணத்தோடு அவர்களை அனைத்துக் கொள்கிறாள் தேன்மொழி.

அவளை மன்னித்து சீனிவாசன் ஏற்றுக் கொள்கிறான்.

புதுவசந்தம் பிறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *