செய்திகள்

கிராமப்புற மக்களுக்கு ஏர்டெல் நிறுவனம் ரூ.49 ரீசார்ஜ் இலவசம்

சென்னை, மே 17–

கொரோனா ஊரடங்கினால் வேலை இழந்து, வருமானம் இழந்து வாழ்வாதாரத்தினை ஏராளமானோர் தொலைத்து தவித்து நிற்கின்றனர்.

எனவே, குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்கள், குறிப்பாக கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.49க்கான ரீசார்ஜ் பேக்கினை இலவசமாக அளிக்க ஏர்டெல் முன்வந்திருக்கிறது.

38 ரூபாய் டாக்டைம், 100 எம்பி டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்க கூடிய 49 ரூபாய்க்கான அந்த ரீசார் பேக்கினை இலவசமாக வழங்க முன்வந்திருக்கிறது ஏர்டெல். 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இச்சலுகையை அளிக்க முன்வந்திருக்கும் ஏர்டெல் நிறுவனத்திற்கு பாராட்டுகளூம், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *