வாழ்வியல்

கால்நடைகளுக்கு தீவனமாகும் புதிய பீட்ரூட்!

இன்று கால்நடைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிவிட்டது. அவை விரும்பி சாப்பிடுவது புற்கள், பசுந்தீவனங்கள். அவை கிடைப்பது அரிதாகி வருகிறது. கிடைத்தாலும் அதிக விலை. எனவே மாற்றுப் பொருளாக எதைக் கொடுக்கலாம் என இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

இந்திய அரசு மத்திய வறட்சி மண்டல ஆராய்ச்சி நிறுவனம், ராஜஸ்தான் ஜோத்பூரில் உள்ளது. இங்கு புதிய தீவன பீட்ரூட்டை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது 4 மாத (120 நாட்கள்) பயிராகும். 1 ஹெக்டேர் (2.2 ஏக்கர்) நிலத்தில் 60 டன் வரை கிடைக்கும். குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் தரும். பல மாவட்டங்களில் இதை தேர்வாக பயிரிட்டுப் பார்த்தனர். அங்கெல்லாம் நன்கு வளர்ந்து அதிக எடையில் பலன் கொடுத்தது.

கறவை மாடுகள் விரும்பி உண்கின்றன. இதன் மூலம் விவசாயிகளும், கால்நடை வளர்ப்போர், கால்நடைத் துறையினர் பயனடைவார்கள். இந்த தீவன பீட்ரூட்டில் பல தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் பல சத்துக்களும் உள்ளன. எனவே கால்நடைகள் ஆரோக்கியமாக வளரும். அதிக பால் தரும் என கால்நடை டாக்டர்களும் கூறுகின்றனர்.

இது பற்றி அறிய…

Director, Central Arid Zone Research Institute,

Govt. of India, Jodhpur, Rajasthan, www.eazri.res.gov.in

மேலும் அறிய:– www.tanuvas.gov.in, www.tanu.ac.in, www.tnhorticulture.gov.in, www.icar.gov.in, www.iias.gov.in பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *