அறிவியல் அறிவோம்
கால்சியத்தின் அளவு அதிகமாக இருக்கும் பால், தயிர், கீரை வகைகள், முட்டை ,வாழைப்பழத்தின் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள்.
கால்சியத்தின் அளவு குறையும் பொழுது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான வயிறு வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சில வயதிற்கு பின் பெண்களுக்கு இந்த மாதவிடாய் முடிந்துவிட்டாலும் அந்த காலகட்டங்களில் வலி மிகவும் அதிகமாக இருக்கும். எலும்புகள் மிகவும் பலவீனமானதாக மாறிவிடுகிறது.
எனவே கால் வலி மூட்டு வலி இடுப்பு வலி போன்ற பிரச்சினைகளும் அதிகமாக ஏற்படும் என்று கூறுகின்றனர். சிறிய அளவில் கீழே விழுந்தாலோ ஏதாவது அடிபட்டாலோ பெரிய அளவில் வலி ஏற்படும்.
இந்த மாதிரி வலி உள்ளவர்கள் நிச்சயமாக தங்கள் உடலில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் அதிகமான கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் சில உணவுகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது.
பன்னீர், தயிர், பால், கீரை வகைகள், வாழைப்பழம் போன்றவைகளில் கால்சியத்தின் அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக பால் பொருட்களிலும் கால்சியம் மிகவும் அதிகமாக இருக்கிறது.
முக்கியமாக கீரை வகைகளை நாம் பலரும் பெரிதாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. கீரை வகைகளில் அதிகமான கால்சியம் இருக்கிறது.
இதுபோக ஆரஞ்சு, ஒரு சில விதைகள் போன்றவைகளிலும் கால்சியம் இருக்கிறது. உங்களது தினசரி உணவு வகைகளில் மேலே குறிப்பிட்ட உணவு இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.