வாழ்வியல்

காலி பிளாஸ்டிக் பாட்டில்களால் படகு: கேரள இளைஞர்கள் அசத்தல்


அறிவியல் அறிவோம் 


ஆற்றுக் கரையோரங்களில் கிடந்த 4500க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து கவர்ச்சிகரமான படகை இளைஞர் குழுவினர் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கொய்லாண்டி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் ஒருங்கிணைந்து கொரோனா ஊரடங்குக் காலத்தில் படகு ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டனர். இதற்காக ஆறு மற்றும் நீர்நிலைக் கரையோரங்களில் கிடந்த 4500க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்தனர். மூங்கில் துண்டுகளைப் பயன்படுத்தி படகிற்கானச் சட்டகத்தை வடிவமைத்தனர். அதில் பிளாஸ்டிக் பாட்டில்கள், மீன்பிடி வலை மற்றும் கயிறு போன்றவற்றைப் பயன்படுத்தி நேர்த்தியாகப் படகை உருவாக்கி முடித்தனர்.

இறுதிக்கட்டத்தை எட்டிய படகை ஆற்றில் விட்டு சோதனையும் செய்து பார்த்தனர். அப்போது படகு மிகவும் வலிமைத் தன்மையுடன் இருந்தது. சுமார் 15 பேர் வரை பயணிக்கும் வல்லமை கொண்டதை உறுதி செய்தனர். படகைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காகக் காற்று நிரப்பிய டயர் டியூப்களை வைத்திருக்கிறனர்.

கொரோனா ஊரடங்குக் காலத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி படகை உருவாக்கி இருக்கும் கோழிக்கோடு இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.