சிறுகதை

காதல் காரணம் – ராஜா செல்லமுத்து

மோகனும் விஜியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். காதலர்கள் .

வீட்டு சம்மதத்தையும் மீறி திருமணம் செய்து கொண்டவர்கள்.

அதனால் தன் வீட்டிற்கு செல்வதற்கு வருத்தப்பட்டாள் விஜி.

மோகன் வீட்டில் எதிர்ப்பு இல்லை என்றாலும் விஜி வீட்டில் பலமான எதிர்ப்பு இருந்தது.

அதனால் மோகன் தன்னுடைய தாயைப் பார்த்துக் கொள்வதற்கு விஜியைத் திருமணம் செய்ய சம்மதித்தான்.

இருவரும் திருமணம் முடித்து, ஒரு வாரம் கடந்த நிலையில் விஜியின் அண்ணன் தம்பிகள் காதலை மறந்து காதல் பிரச்சினையை மறந்து சேர்த்துக் கொள்வதாக உறுதி கூறினார்கள்.

அண்ணன் தம்பிகள் காதல் பிரச்சினையை மறந்து விட்டார்கள் என்று நினைத்த மோகனும் விஜியும் விஜியின் ஊருக்கு புறப்பட்டார்கள்.

காரணம் உடன் மூன்று சகோதரர்களில் இரண்டு பேர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

ஒருவேளை நம் காதலையும் அவர்கள் அங்கீகரித்து இருப்பார்கள் என்ற மகிழ்ச்சி பிறந்தது .

அதனால் தான் அண்ணன் கூப்பிட்டதும் ஓடோடி சென்றார்கள்.

தங்கையை, தங்கை கணவனை அழைத்திருந்த விஜியின் அண்ணன் சற்குணம் விஜி வந்ததும் அவள் பெயரில் இருந்த அடகு வைத்திருந்த நகைகளை மீட்டினான்.

சிறிது நேரத்திற்கு எல்லாம் வெளியில் போனவன் மீண்டும் திரும்ப வந்தான்

என்னண்ண கறி எடுக்கப் போகலையா? என்று விஜி கேட்டபோது,

கோபத்திலிருந்த சற்குணம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஜியைச் சரமாரியாக குத்தினான், வெட்டினான், ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருந்த விஜி, தன் காதல் கணவன் மோகனை அங்கிருந்து போகுமாறு அப்புறப்படுத்தினாள். துரத்தினாள்.

ஆனால் மோகன் போகவில்லை மோகனுக்கும் வெட்டு விழுந்தது இரண்டு பேரும் அதே இடத்தில் மரணம் அடைந்தார்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட மோகனின் நண்பன் அழுதான்

அடப்பாவிகளா வாழ வேண்டிய மனுஷங்களை கொன்னுட்டீங்களே நீங்க எல்லாம் மனுசங்களா ? என்று புலம்பினான்.

இந்தக் காதல் எப்படி வந்தது என்று அவன் விளக்கியபோது அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் கசிந்தது.

மோகனின் அம்மா மனநலம் சரியில்லாத பெண்.

அதேபோல் விஜியின் அம்மாவும் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

இந்த இரண்டு பேரும் ஒரே மருத்துவமனைகள் சந்தித்துக் கொண்டார்கள்.

அருகே அருகே இருவருக்கும் ஆன இருக்கை.

மோகன் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம். விஜியும் வேலைக்கு சேர போக வேண்டும் என்று நிர்பந்தம்.

அதனால் மோகன் ஒரு நாள் வேலைக்கு செல்லும் போது விஜியின் அம்மாவை மோகன் பார்த்துக் கொண்டான்.

விஜி வேலைக்கு செல்லும் போது விஜி மோகன் அம்மாவை விஜி பார்த்துக்கொண்டாள்.

இரண்டு தாய்களும் மனநலம் சரியில்லாதவர்கள். அதனால் அந்த உணர்வு பொருத்தம் இரண்டு பேருக்கும் இருந்தது.

இந்த மாதிரி ஒரு பெண் இருந்தால் தன் அம்மாவை நல்ல முறையில் பார்த்துக் கொள்வாள் என்று மோகனுக்கு தோன்றியது .

விஜி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று கேட்டான் மோகன். .விஜி

சரி என்று சொன்னாள்விஜி.

இருவருக்கும் காதல் பிறந்தது. திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்தத் திருமணம் நடந்தது கூட மோகனின் தாய்க்கும் தெரியாது. விஜய்யின் தாய் ஓரளவு மனநலம் தேரியிந்திருந்தாள்.

ஆனால் மோகனின் தாய்க்கு அப்படி இல்லை .இந்த பரஸ்பர காதல் தன் அம்மாவை நல்லபடியாக இந்தப் பெண் பார்த்துக் கொள்வாள் என்பதற்காக தான் மோகன் திருமணம் செய்தான்.

இப்போது,கரம் பிடித்தவன் இன்று மரணம் அடைந்து கிடக்கிறார்கள் என்பது கூட அந்த மனநலம் பாதித்த தாய்க்கு தெரியாது.

இந்த ஆணவம் எப்பாேது அழியும் என்று மாேகனின் நண்பன் சாென்ன பாேது அங்கிருந்தவர்களுக்கு கண்ணீர் பெருகியது.

Leave a Reply

Your email address will not be published.