செய்திகள்

காஞ்சீபுரத்தில் தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதம்

காஞ்சீபுரம்,செப்.20-–

காஞ்சீபுரத்தில், தூய்மையே சேவை இயக்கம் விழிப்புணர்வு ரதத்தை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் சுகாதார அமைச்சகமானது தூய்மையே சேவை இயக்கம் 2018ஐ 15.9.2018 முதல் 2.10.2018 வரை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் இத்திட்டத்தினை சிறப்பாக அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்திடவும் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தூய்மை ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதன்படி காஞ்சீபுரம் மாவட்டதில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பள்ளிகள், அங்கன்வாடிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுகாதாரத்தினை மேம்படுத்துதல். சுகாதார ஊக்குநர்களை கொண்டு தனிநபர் இல்லக் கழிப்பறைகளை முறையாக பயன்படுத்துதல் குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தல். பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு சுகாதார விழிப்புணர்வு பேரணி நடத்துதல். மரக் கன்றுகள் நடுதல். சுகாதாரம் குறித்து கலைநிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் நெகிழி இல்லா காஞ்சீபுரம் மாவட்டத்தை உருவாக்குவதற்கு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு அதன் விவரத்தினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி அ.நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *