செய்திகள்

காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் 233வது மடாதிபதியாக நடராஜன் தேர்வு

காஞ்சீபுரம்,பிப்.15 –

காஞ்சீபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் மடத்தின் 232 ஆவது மடாதிபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறைவனடி சேர்ந்த நிலையில் புதிய மடாதிபதி தேர்வு நடைபெற்றது.

மடாதிபதி தேர்விற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன்படி பெறப் பட்ட விண்ணப்பங்களில் தகுதி யுடைய 13 பேர் செய்யப்பட்டு அவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள தொண்டை மண்டல ஆதீனத்தின் சீடர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு ஆன்மீகப் பணிகளை செய்துவரும் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் நடராஜன் புதிய மடாதிபதியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து தருமையாதீனம் குரு மகா சந்நிதானம் அவர்களின் அருள் ஆணையின்படி தருமபுரம் ஆதீனம் தென்மண்டல கட்டளை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர் நடராஜனுக்கு காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233 குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாச பரமாசார்ய சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு மடத்தின் பொறுப்புகள் வழங்கப்பட்டது.

மடத்தின் மூத்த சீடர்கள், சான்றோர்கள் முன்னிலையில் பொறுப் பேற்றுக்கொண்ட 233-வது மடாதிபதி, மடத்தின் பூஜைகளை அனைவர் முன்னிலையிலும் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *