செய்திகள்

கபினி அணையின் காட்டாற்று வெள்ளத் தண்ணீரில் பாலத்தின் தூணைப் பிடித்தபடி 60 மணி நேரம் போராட்டம்: உயிர் பிழைத்த 65 வயது பூசாரி

பெங்களூரு ஆக.14

இளம் கன்று பயம் அறியாது என்று சொல்வார்கள் ஆனால் 65 வயதை நெருங்கிய முதியவர் – கோவில் பூசாரி, பயம் அறியாது தன்னுடைய வீரதீர பராக்கிரமத்தை காட்டுவதற்காக மடை திறந்த வெள்ளத்தில் குதித்து உயிர் தப்பிப் பிழைத்த மயிர் சிலிர்க்க வைத்த சம்பவம் பெங்களூரு நகரில் நடந்திருக்கிறது.

கபினி நீர் தேக்கத்தை திறந்ததும் கபில ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. நஞ்சன்கூடு நகரமே வெள்ளத் தண்ணீரில் தத்தளித்தது. அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மூர்த்தி தொபுக்கடீர் என்று அந்த காட்டாற்று வெள்ளத்தில் குதித்து வீர தீர பராக்கிரமத்தை காட்டினார்.

இதை நேரில் பார்த்த அவரது குடும்பத்தினரும், அக்கம்பக்கத்து குடியிருப்புவாசிகளும், நண்பர்களும் பதறிப் போனார்கள். பதைபதைத்து நின்றார்கள். வெள்ளத் தண்ணீரில் அவர் குதித்ததைப் படம் எடுத்தார்கள். அதை வாட்ஸ் அப்பில் போட்டதும், அது வைரல் ஆனது.

வெள்ளத் தண்ணீரில் குதித்த அவரின் கதி என்ன என்று அவர்கள் பதற்றத்துடன் கவலையும் கண்ணீருமாக காத்திருந்தார்கள். 2 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவராத நிலையில், அவர் இறந்ததாகவேக் கருதப்பட்டதால் அவர் உயிர் பிழைத்து நஞ்சன்கூடு ஊரக காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானம।ரங அவரது குடும்பத்தினரும் நண்பர்களும், ஊர் மக்களும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறார்கள்.

இதுமாதிரி கரைபுரண்டு ஓடும் ஆற்று நீரில் வீர தீரத்தை காட்டுவதற்காக வெங்கடேஷ் மூர்த்தி குதிப்பது என்பது இது 3ம் முறை. ஆனால் அவர் எப்படியும் தப்பித்து கரை சேர்வார் என்று காத்திருந்தோம். ஆனால் 2 நாட்கள் காணோம் எங்களுக்கு பயம் அதிகரித்து விட்டது. தெய்வாதீனமாக அவர் உயிர் பிழைத்து வந்து விட்டார். இது மாதிரி அவர் 25–30 வருஷமாக குதிப்பது, நீச்சலடிப்பது அவருக்கு வாடிக்கை என்று அவருடைய சகோதரி மஞ்சுளா நெகிழ்ச்சியோடு கூறினார்.

முன்பெல்லாம் இது மாதிரி கரை புரண்டு ஓடும் தண்ணீரில் குதித்ததால்… ஒரு மணி நேரத்திற்குள் மூடு வந்து சேர்ந்து விடுவார். அது மாதிரி தான் இப்போதும். வருவார் என்று நினைத்தால் ஏமாற்றம். 2 நாட்கள் ஆகியும் அவர் வராததால் எங்கே இறந்துவிட்டாரோ என்று பயம் கவ்விப் பிடித்தது. அவரை உயிரோடு பார்த்த பிறகு தான் எங்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு என்று மஞ்சுளா ஆனந்தக் கண்ணீர் விட்டபடியே சொன்னார்.

ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது திக்குமுக்காடி போனேன் சமாளிக்க முடியாமல் திணறினேன் ஹெஜ்ஜிகே ஆற்றுப் பாலத்தின் தூண்களுக்கு மத்தியில் தான் நான் குதித்துச் செல்வது வாடிக்கை ஆனால் இம்முறை ஆற்றுத் தண்ணீரில் சுழலின் வேகம் கடுமையாக இருந்தது. அதனால் என்னால் நீச்சலடித்து தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினேன். பாலத்தின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டே தூங்கினேன் 60 மணி நேரம் அந்தப் பாலத் தூணைப் பிடித்துக்கொண்டு உயிருக்கு போராடினேன். ஒரு வழியாக வெள்ளத் தண்ணீரின் அளவு குறைந்ததும் தப்பித்து கரை ஏறினேன் என்று டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி இடையே உள்ள தூரம் 10 ஆயிரம் கிலோ மீட்டரை சைக்கிளிலேயே கடந்த பெருமைக்குரியவர் வெங்கடேச மூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *