செய்திகள்

கனிமொழிக்கு கொரோனா தொற்று

சென்னை, ஏப்.3–

திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொற்று உறுதி

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, திமுக மகளிர் அணிச் செயலாளரான தூத்துக்குடி எம்பி கனிமொழி, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் உடல்நிலையில் சற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் கனிமொழி எம்பி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

வேட்பாளர்கள் யார் யார்?

முன்னதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபு, சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ்

வேட்பாளர் மாதவரா, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு ஆகியோர் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும் மமக தலைவருமான ஜவாஹிருல்லா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *