செய்திகள்

கடல்சார் ஆய்வு கப்பலில் தீ

மங்களூரு :

கர்நாடகாவில் மங்களூரு கடல் பகுதியில் சாகர் சம்பதா என்ற கடல்சார் ஆய்வு கப்பலில் திடீரென தீப்பிடித்தது.

தீயை அணைக்கும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விக்ரம் மற்றும் ஷூர் ஆகிய கப்பல்கள் ஈடுபட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, மங்களூரு துறை முகத்துக்கு ஆராய்ச்சி கப்பல் கொண்டு வரப்பட்டது.

விபத்திற்குள்ளான ஆராய்ச்சி கப்பலில் 16 விஞ்ஞானிகள் உள்ளிட்ட 30 பேர் பயணித்துள்ளனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *