செய்திகள்

கஞ்சா விற்ற ரவுடி கைது

காஞ்சீபுரம்,ஆக.7–-

காஞ்சீபுரம் பொய்யாகுளம் பகுதியில் வசிப்பவன் சந்தோஷ் (26). இவன் மீது கொலை, கொலை முயற்சி வழிப்பறி ஆகிய வழக்குகள் உள்ளன. ரவுடியான சந்தோஷ், காஞ்சீபுரம் அல்லாப்பாத் ஏரி அருகே கஞ்சா விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை, சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் மற்றும் தனிப்படை போலீசார் அல்லாபாத் ஏரிக்கரை அருகே விரைந்து சென்றனர்.

அப்போது, சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் கஞ்சா விற்றது தெரிந்தது. உடனடியாக ரவுடி சந்தோஷை சின்ன காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவன் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதையொட்டி ரவுடி சந்தோஷ் காஞ்சீபுரம் சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டான்.

ரவுடி சந்தோஷின் தாயார் பவானி, ஏற்கெனவே கஞ்சா வழக்கில் குண்டா தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறைச்சாலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *