செய்திகள்

ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

சென்னை, பிப்.12–

சென்னையில் தங்கம் விலை 36 ஆயிரத்துக்கும் குறைந்து ஒரு சவரன் ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு தங்கம் விலை குறைந்தது. தற்போது விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. திடீரென இந்த வாரத்தில் ஒரே நாளில் ரூ.560 அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை, 3 வது நாளாக சரிந்து காணப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 328 குறைந்து ரூ.35,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,483 ஆக விற்பனையாகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.73,500 ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *