வாழ்வியல்

ஒரு உலோகத்தின் மேல் வேறொரு உலோகம் பூசும் உலோகக் கலவை ஆராய்ச்சி

ஒரு உலோகத்தின் மேல் வேறொரு உலோகம் பூசும் உலோகக் கலவை ஆராய்ச்சி கவரிங் முறையால் விலை உயர்ந்த தங்க நகைகளை வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த உலோக பூச்சு முறையால் கவரிங் நகை வாங்கி பயன்பெறுகிறார்கள்.

இந்த முறை அறிவியல் துறை உட்பட பலவற்றுக்கு பயன்படுகின்றன. ராக்கெட்டுக்கள் (thermal protection system (TPS) உட்பட பலவற்றை உயர் வெப்ப நிலையில் இருந்து பாதுகாக்க பல பொருட்கள் கலந்த பூச்சு முறை பயன்படுகிறது.

விலை உயர்ந்த தங்க நகைகளை வாங்க முடியாத ஏழைகள் கூட இந்த பூச்சு முறையால் பயன்பெறுகிறார்கள்.

அறிவியல் முறையில் பார்த்தால் சில உலோகங்கள் இன்னொரு உலோகத்துடன் சேர்ந்து வேறொரு உலோகத்தை உருவாக்கும்.இது உலோகக் கலவை (மாழைக் கலவை- alloy) எனப்படுகிறது. உதாரணமாக பித்தளை (Brass = zinc + copper); வெண்கலம் (Bronze= copper+tin) போன்றவற்றை சொல்லலாம்.

உலகில் உள்ள உணவு,உடை,பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. இந்த அணுக்களை நம் கண்ணால் மட்டுமல்ல, மைக்ரொஸ்கோப்களால் கூடக் காண முடியாதபடி அளவில் சிறியவை. இவற்றை அறிவியல், scanning tunneling microscope (STM), atomic force microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் கண்டறிய முற்பட்டதன் விளைவு நானோ அறிவியல் தொழில்நுட்பம் உருவானது. இந்த தொழில் நுட்பத்தை அறியாமலேயே, நம்மவர்கள் முக்கியமாக, தமிழர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தங்க,வெள்ளி நிறக் கலவைகள் மூலம் பஞ்ச உலோக கலவையில் உருவாக்கிய அழகு கோயில் கோபுரங்கள், சிலைகள், சாதனங்கள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *