வாழ்வியல்

ஒருவருடைய மூளையிலிருந்து வேறொருவருக்கு நேரடித் தகவல்–2

2015-ம் ஆண்டே, ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர் இந்தச் சாதனங்களை கொண்டு இரண்டு நபர்களின் மூளையை கனெக்ட் செய்தனர். பின்பு இதன்மூலம் இருவரும் 20 கேள்விகள் கொண்ட வினா-விடை விளையாட்டு ஒன்றை ஆடினர்.

இதன் பின்பு இரண்டுபேர் என்றில்லாமல் பலரையும் இந்த நெட்ஒர்க்கில் இணைத்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர். இப்படிப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று உலகின் முதல் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் நெட்ஒர்க் ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர் ஆண்ட்ரியா ஸ்டாக்கோ மற்றும் அவரது குழுவினர்.

இந்த BrainNet நெட்ஒர்க் மூலம் கனெக்ட் செய்யப்பட்ட மூவரை, டெட்ரிஸ் (tetris) என்ற கேம்மின் சிம்பிளான வெர்ஷன் ஒன்றை ஆட வைத்துள்ளனர்.

“இந்த முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்க முடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணி மிகவும் சாதாரணமானதுதான். ஒவ்வொரு சிந்தனையின் போதும் மூளையில் மின்னணு மாற்றங்கள் ஏற்படும். முன்பு கூறிய EEGs எலெக்ட்ரோடுகள் கொண்டிருக்கும். இதைத் தலையில் மாட்டிவிடுவர். இது மின்னணு மாற்றங்களைக் கண்காணிக்கும். 15Hz சக்தியுள்ள ஒளியைக் காணும்போது ஓர் அளவிலும், 17Hz சக்தியுள்ள ஒளியைப் பார்க்கையில் ஓர் அளவிலும் மின்னணு மாற்றங்கள் நிகழுமாம். இதை EEG-யால் சரியாக வேறுபடுத்திக் காட்டமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *