வாழ்வியல்

ஒருவருடைய மூளையிலிருந்து வேறொருவருக்கு நேரடித் தகவல்–1

ஒருவரின் மூளையிலிருந்து இன்னொரு மூளைக்கு நேரடியாக தகவல் அனுப்பலாம் எனும் முடிவுகள் வருங்காலத்தில் இன்னும் பல வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன்மூலம் மூளைகளை கனெக்ட் செய்யும் சோஷியல் நெட்ஒர்க் போன்ற ஒன்றைக்கூட உருவாக்கமுடியும்” என்கின்றனர் இந்தக் குழுவினர்.

ரு நபரும் இன்னொரு நபரும் தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் எப்படியெல்லாம் பரிமாறிக் கொள்ளமுடியும்? பேச்சுவார்த்தையில் அதைச் செய்யலாம்; இல்லை எழுத்துகள் மூலம் பரிமாறலாம். எதுவுமே முடியாதென்றால் சைகைகள் மூலமாவது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆனால் இது எதுவுமின்றி, நேரடியாக ஒருவர் மூளையிலிருந்து இன்னொருவர் மூளைக்குத் தகவல்களை எடுத்துச்செல்லும் தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து வருகின்றனர் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். இதை `BrainNet’ என்று அழைக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு சிந்தனையின் போது, மூளையில் நடக்கும் மாற்றங்களைக் கண்டறிந்து நமக்குக் காட்டும் சாதனங்கள் பலவற்றை வடிவமைத்துள்ளனர் மருத்துவர்களும், நரம்பியல் ஆராய்ச்சியாளர்களும். இந்த முன்னேற்றங்களால்தாம் நேரடியாக மூளையிலிருந்து மூளைக்குத் தகவல்கள் அனுப்பும் இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமாகியுள்ளது.

இந்தச் சாதனங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று Electro Electroencephalograms (EEGs) மற்றொன்று Trans cranial Magnetic Stimulator(TMS). இதில் EEG மூளையில் நடக்கும் மாற்றங்களைப் பதிவு செய்யும். TMS அந்தத் தகவல்களை இன்னொரு மூளைக்குக் கொண்டு செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *