செய்திகள்

ஐதராபாத்தில் முக்கிய சாலையில் சுற்றிய சிறுத்தை: லாரி கிளீனரை தாக்கியது

Spread the love

ஐதராபாத், மே 18–

ஐதராபாத்தில் உள்ள முக்கிய சாலையில் லாரி கிளீனரை சிறுத்தை ஒன்று தாக்கியது.

ஐதராபாத்தில் காட்டிலிருந்து வழிமாறிய சிறுத்தை ஒன்று முக்கிய சாலைகளில் நடமாடும் காட்சி சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் முக்கிய சாலையில் சிறுத்தை நடமாட்டம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. அதில் சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருக்கிறது. டிரைவர் மற்றும் கிளீனர் லாரிக்கு அருகே நின்று கொண்டிருக்க சிறுத்தை வருவது தெரிந்ததும் டிரைவர் லாரிக்குள் ஏறி விடுகிறார். கிளினர் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடி பின் லாரிக்குள் ஏற முயற்சி செய்கிறார். திடீரென் பாய்ந்து வந்த சிறுத்தை அவரது காலை பிடிக்க, ஆனால் அவர் காலை உதறிக் கொண்டு லாரியில் ஏறி விடுகிறார்.

அதன்பின் சிறுத்தை அருகில் இருக்கும் பூட்டிய கடை ஒன்றின் மீது ஏற முடியாமல் திணறுகிறது. அங்கிருக்கும் நாய்கள் சிறுத்தை பார்த்து துரத்த சிறுத்தை அங்கிருந்து வேறொரு இடத்திற்கு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், சிறுத்தை இன்னும் ஒரிரு நாட்களில் பிடிப்பட்டு விடும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *