செய்திகள்

ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

Spread the love

விழுப்புரம், ஜூன் 12–

விழுப்புரம் ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளகுறிச்சி, சேலம் செல்லும் சாலையில் ஏ.குமாரமங்கலத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் 6–ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மொத்தம் 560 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 12–ம் வகுப்பில் அரசு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் ஆர்.திணேஷ் – 498, 2ம் இடம் வெங்கடேசன் – 470 , 3–வது இடம் தீபிகா – 459. 10 ம் வகுப்பில் எ.ஆஷா 403 மதிப்பெண் பெற்று முதலிடம், எம்.கே.நிவேதிதா 390 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், எஸ்.சுவேதா 377 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். 11ம் வகுப்பில் வாசுகி 450 மதிப்பெண் பெற்றனர்.

இந்த பள்ளியில் 12, 11, 10 -ம் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண், இரண்டாவது மதிப்பெண், மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவிகள் மற்றும் மற்ற மாணவர்களையும் ஊக்கப்படுத்து வேண்டும் என்ற நோக்கத்தோடு மாணவர் மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் வி.மெய்யப்பன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.என். ஜெயராமன் விழாவிற்கு தலைமை தாங்கினார். ஆதனூர் பாச்சபாளையத்தை சேர்ந்த முன்னாள் அரிமா சங்க தலைவர் ஆர்.மோகன், உளுந்தூர்பேட்டை சக்திமுருகன், டி.எம்.ராஜன் ஆகியோர் சமா ஆகிய இரு சமூக ஆர்வலர்களும் சொந்த தொகையில் 12, 10-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா 5000-ம், இரண்டாமிடம் பெற்ற மாணவர்ளுக்கு தலா 3000-ம், மூன்றாமிடம் பிடித்த மாணவர்களுக்கு தலா 2000-ம், வழங்கிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசு தொகையினை வழங்கி சக மாணவர்களையும் ஊக்கப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *