செய்திகள்

ஏர் இந்தியாவின் பங்குகளை தனியார் மயமாக்குவது உறுதி : மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

புதுடெல்லி, ஜூன் 28–

ஏர் இந்தியாவின் பங்குகளை தனியார் மயமாகும் திட்டத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏஐஎஸ்ஏஎம் என்ற அமைப்பு கடந்த மார்ச் மாதத்தில் கூடிய போது கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் முதலீட்டு குறைப்புக்கு சூழ்நிலை சாதகமாக இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த அருண் ஜெட்லீயும், சுரேஷ் பிரபுவும் இப்பொது அமைச்சர்களாக இல்லை.

எனவே அவர்களை நீக்கி நிர்மலா சீதாராமன், ஹாதீப்சிங் பூரி ஆகியோருடன் இக்குழு மாற்றியமைக்கப்பட உள்ளது. நிதின் கட்கரி தொடர்ந்து இக்குழுவில் நீடிக்கிறார். ஏர் இந்தியாவை மீட்பதற்காக அரசு அளித்துவரும் ஆதரவு காரணமாக, நிதி நெருக்கடிக்கு ஆளான ஏர் இந்தியாவில் ஓரளவு நிலைமை சீரடைந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பொதுகுழுக்கூட்டம் நேற்று டெல்லியில் கூடியபோது, ஏர்-இந்தியாவின் முதலீட்டை தனியாருக்கு வழங்கும் முடிவு தொடர்ந்து அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஏர் இந்தியா நிறுவனம், நலிவடைந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவன பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஏற்கெனவே இந்த நிறுவன பங்குகளை விற்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை எனவே புதிய உத்திகளை மத்திய அமைச்சர்கள் குழுவிடம் (ஏஐஎஸ்ஏஎம்) நிதியமைச்சகம் சமர்ப்பித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு

அதில், ஏர் இந்தியா நிறுவனத்திடம் தனக்கு உள்ள பங்குகள் அனைத்தையும் (100 சதவீதம்) அல்லது 76 சதவீதத்தை விற்க முன்வந்துள்ளது. கடந்த ஆண்டு ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்கவும் நிர்வாக மேலாண்மை கட்டுப்பாட்டை மாற்றவும் தயார் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த அறிவிப்பு யாரையும் கவரவில்லை என்பதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், ஏர் இந்தியாவின் பங்குகளை தனியார் மயமாக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *