செய்திகள்

ஏசியன் பெயிண்ட்ஸ் சார்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையுடன் ‘டீரிமிங் ஆப் ஸ்டார்ஸ்’ நிகழ்ச்சி

கோவை, ஏப். 15

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நடத்திய ட்ரீமிங் வித் த ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வானது ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இசை மேதை ஏ.ஆர்.ரஹ்மான் இடையேயான ஒத்துழைப்பை காட்சிப்படுத்தியது. இசை மேஸ்ட்ரோ மீண்டும் 1991 இல் அவரால் உருவாக்கப்பட்ட ஏசியன் பெயிண்ட்ஸ் ஜிங்கிளை மேடையில் மறு உருவாக்கம் செய்தார்.

இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய ஏசியன் பெயிண்ட்ஸ் சிஓஓ அமித் சிங்லே, ஒவ்வொரு ஆண்டும் எங்களது டீரிமிங் ஆப் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி நட்சத்திரங்களும், படைப்பாற்றல் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் ஐகான். மீண்டும் அவருடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஐகானிக் மாஸ்டர் பீஸ் ஜிங்கிளை இசைப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும் என கூறினார்.

தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன் புதிய மற்றும் புதுமையான ஆன்டி பாக்ட்டீரியல் பெயிண்டான, ராயல் ஹெல்த் ஷீல்டுக்காக ஏசியன் பெயிண்ட்ஸ் சமீபத்தில் ஒரு புதிய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு பிரபலங்களும் ஒன்றாக விளம்பர பிரச்சாரத்தில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *