செய்திகள்

எரிபொருள், சிலிண்டர்கள் தங்குதடையின்றி கிடைக்கும்

Spread the love

எரிபொருள், சிலிண்டர்கள் தங்குதடையின்றி கிடைக்கும்:

இந்தியன் ஆயில் கார்பரேசன் தகவல்

மதுரை,ஏப்.02–

தங்குதடையின்றி எரிபொருள், காஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி எண்ணெய் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநில தலைவர் ஜெயதேவன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :–

கொரோனா காரணமாக ஊரடங்கு நடந்து வரும் இந்த சமயத்தில் அவசர மருத்துவ உதவிக்காகவும் ஆம்புலன்ஸ், அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பேரஷன் உள்ளிட்ட அரசு பொது துறை பெட்ரோலியம் நிறுவனங்கள் தங்கு தடையில்லா எரிபொருள் மற்றும் சமையல் காஸ் வினியோகத்தை செய்து வருகிறது. சில்லறை விற்பனையில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு வழங்கவும் அவை பல கோடி பொதுமக்களை சென்றடையும் பொறுப்பினை கொண்டுள்ள பொது துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பெட்ரோலிய நிறுவனங்கள் இவற்றை திறம்பட செயல்படுத்தி வருகிறது. தற்போதைய கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றும் இந்த நிறுவனங்களின் விற்பனையாளர்களின் பணியாளர்களுக்காக அரசு மற்றும் பொது துறை எண்ணெய் நிறுவனங்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

அத்தியாவசிய பொருளான சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிபொருட்கள் ஒவ்வொரு நிலையிலும் பணியார்களால் கையாளப்படுகின்றன. பெட்ரோல் பம்ப் எரிபொருள் நிரப்புவோர், மேலாளர்கள், எல்பிஜி சிலிண்டர் விநியோகிப்பவர்கள், ஷோரூம் பணியாளர்கள், குடோன் பாதுகாப்பாளர்கள், எல்பிஜி மெக்கானிக்குகள், டிரக் டிரைவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தற்போதைய சூழ்நிலையிலும் நன்முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கும் அச்சுறுத்தல்கள் உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டு இவர்கள் இறக்க நேரிட்டால் ஒருமுறை நிதியுதவியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த தொகை பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கோ வாரிசுதார்களுக்கோ கிடைக்கும்.

தற்போதைய ஊரடங்கு சூழ்நிலையில் வாடிக்கையாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்று பரபரப்பு அடையாமல் புக்கிங் செய்யலாம். தற்போதைய நிலையில், எரிவாயு சிலிண்டர்கள் வழக்கம்போல எவ்வித தடையும் இல்லாமல் போதுமான அளவுக்கு பொது துறை நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு விநியோயோகிக்கப்பட்டு வருகின்றன. போதுமான சிலிண்டர்கள் ஆயில் நிறுவனங்களிடமும் டீலர்கள் கையிருப்பிலும் உள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் 900 விநியோகஸ்தர்கள் 1கோடியே30லட்சம் கோடி வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 கோடியே 20 லட்சம் சிலிண்டர்கள் விநியோகித்து வருகின்றன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் வழக்கமாக தங்களது விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் ஒரு சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த சிலிண்டர் பெற 15 நாள் இடைவெளியில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இது பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *