செய்திகள் நாடும் நடப்பும்

எரிசக்தி அரசியலில் பிரதமர் மோடியின் யுக்திக்கே வெற்றி உறுதி செய்கிறது எஸ்சிஓ, ஓபெக் முடிவுகள்


ஆர்.முத்துக்குமார்


எரிசக்தி – உலக பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிகப்பெரிய பங்காற்றல் செய்வதை அறிவோம். பல யுத்தங்களின் பின்னணியில் எரிசக்தி காரணமாக துவங்கியதையும் மறந்து விடக்கூடாது.

தொழில் புரட்சி உருவாகிய நாள் முதலாய் எரிசக்தியே மிக அவசியமான ஒரு அங்கமாக உருவெடுத்தது. போரை ரத்தமின்றி செய்திடவும் மற்றவர்களை வீழ்த்தவும் மிக வல்லமை பொருந்திய நாடாக உயரவும் எரிசக்தி துறை அனுபவிக்கலாம்.

இன்று எரிசக்திக்காக ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டினால் ஒரு கட்டத்தில் அமெரிக்கா பதிலுக்கு தொழில்நுட்ப உதவிகளை செய்யாதே!

இந்தச் சிக்கல்கள் தற்போது இந்தியா முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.

தற்போது சமர்கண்ட் உச்சி மாநாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22வது மாநாட்டில் ரஷ்யா வெளியிட இருக்கும் அறிவிப்புகளை எண்ணை வள நாடுகளின் அமைப்பான OPEC எரிசக்தி விவகாரத்தில் பல்வேறு புது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

ரஷ்யா, இந்தியா உட்பட சில நட்பு நாடுகளுக்கு மிக குறைந்த விலையில் ரூபாய் அல்லது ரஷ்ய பணமான ரூபிளில் வர்த்தகம் செய்ய அனுமதித்துள்ளது.

உலக வங்கிகள் குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் ரஷ்யாவை வர்த்தக வட்டத்தில் இருந்து வெளியேற்றி விட்டது. இந்நிலையில் எஸ்சிஓ மற்றும் பிரிக்ஸ் அமைப்பு அங்கத்து நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணையை வாங்கிப் பயன் அடைவது ஓபெக் அமைப்பும் குறிப்பாக அதன் தலைமை பொறுப்பு வகிக்கும் சவுதி அரேபியாவும் கையை பிசைந்தபடி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகிறார்கள்.

சமீபமாக பிரதமர் மோடி சர்வதேச விவகாரங்களில் எல்லா தலைவர்களுடனும் நட்பு கரம் நீட்டி வந்தது வரஇருக்கும் சிக்கல்களை சமாளிக்க துருப்புச் சீட்டாகவே இருக்கும்.

சவுதி அரேபியா ரஷ்யாவுடன் நமது நெருக்கத்தை புரிந்து கொண்டவர்கள். அமெரிக்கா சவுதி அரேபியா மீது எச்சரிக்கைகள் விட்ட போது நாம் சவுதி அரேபியாவை ஆதரித்ததையும் மறந்து விடக்கூடாது.

ஒருவேளை இந்தியா மீது முற்றுகை என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்க முன்வருமுன் அவர்கள் யோசிக்க வேண்டியது பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார, அரசியல் நடப்புகளில் இந்தியா அமெரிக்காவை ஆதரிக்காது.

அமெரிக்காவிற்கு இன்றைய கடுமையான பொருளாதார சூழ்நிலையில் அப்படி ஒரு நன்மை தரும் நிலையை மனதில் கொண்டு இந்தியா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது.

மேலும் உலக நாடுகள் கரும்புகை வெளியேற்றத்தை குறைத்திடும் வகையில் எரிசக்தி உபயோகத்திற்கு மாற்று மீளுருவாக்கம் செய்யதக்க மின் ஆற்றல் முறைகளுக்கு மாறி வருவதால் சவுதி அரேபியா உட்பட இதர கச்சா எண்ணை வளைகுடா நாடுகள் தங்களது பொருளாதாரம் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டம் கண்டு விடுமே என்ற அச்சத்தில் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எது எப்படியோ, பிரதமர் மோடி சீனா, ரஷ்ய அதிபர்களுடன் பேச இருக்கும் பல்வேறு பொருளாதார பேச்சு வார்த்தைகள் உலக வரலாற்றில் பொறிக்கப்படக்கூடிய அதிமுக்கிய முடிவுகளாக இருக்கப்போகிறது.


Leave a Reply

Your email address will not be published.