செய்திகள்

எம்.எல்.ஏ. கூட்டத்தில் ஏகமனதாக ஆதரவு: ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் இன்று தேர்வு

விஜயவாடா,மே.25–

ஆந்திரத்தில் அமோக வெற்றி பெற்றுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திரத்தில் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், 151 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் விஜயவாடாவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முறைப்படி சட்டமன்றக் குழு தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்படார்.

இதைத் தொடர்ந்து, ஆந்திரப்பிரதேச கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மனை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். வரும் 30ம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். பதவியேற்பு விழாவில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *