சிறுகதை

என்னை மறந்திடுங்க- ஆவடி ரமேஷ்குமார்

” இங்க பாருங்க மாதேஷ், எங்கப்பாவும் அம்மாவும் ரொம்ப நல்லவங்க.என் மேல உயிரையே வச்சிருக்காங்க.அதே மாதிரித்தான் எங்கக்கா மேலயும் உயிரையே வச்சிருந்தாங்க.ஆனா எங்கக்கா எங்கப்பா அம்மாவை மதிக்காம யாரோ ஒரு வேலை

வெட்டியில்லாதவனை போய் காதலிச்சு, அவன் பேச்சைக்கேட்டுட்டு எங்க யார்கிட்டயும் பேசித்தீர்க்காம

‘ கடிதம்’ எழுதி வச்சிட்டு ஓடிப்போயிட்டா.இதனால எங்கப்பா, எங்கே நானும் வேலை வெட்டியில்லாத

ஒரு முட்டாள் பையனை காதலிச்சி அவன் பேச்சைக்கேட்டு

எங்கக்கா மாதிரி ஓடிப்போயிடுவேனோன்னு தினமும் கண்கொத்தி பாம்பு மாதிரி என்னை கண்காணிச்சிட்டு வர்றாரு.

இந்த சூழ்நிலைல, நீங்க என்னதான் அம்பதாயிரம் ரூபா சம்பளத்துல ஒரு பிரைவேட் கம்பெனில மேனேஜரா இருந்தாலும் முறைப்படி என் வீட்டுக்கு வந்து பெண் கேட்காம இப்படி

‘ ஓடிப்போலாமா’ னு என்னை போன்ல கூப்பிட்டு பேசறது நல்லா இல்லீங்க. நீங்க நம் காதலை உங்க அம்மா,அப்பாகிட்ட சொல்லிட்டு அவங்க

சம்மதத்தோட முறைப்படி என்னை பெண் கேட்டு எங்க வீட்டுக்கு வாங்க.பெண் கேட்டு வீட்டுக்கு வர்றதுக்கு பயமா இருந்தா ப்ளீஸ், தயவு செய்து

என்னை மறந்திடுங்க மாதேஷ்!” சொல்லிவிட்டு டொக்கென்று

போனை வைத்தாள் பானு.

அரைமணி நேரம் சென்றிருக்கும்.

ஹாலில் இப்போது டி.வி. பார்த்துக்கொண்டிருந்த பானுவை மாடியிலிருந்த அப்பா சுதர்சனம், அம்மாவை விட்டு மாடிக்கு வரும்படி அழைத்தார்.

தயங்கியபடி மாடிப்படி ஏறிப்போனாள் பானு.

” என்னம்மா…பானுமதி! உங்க அக்கா மாதிரி காதலா? ம்…ஆனா உங்கக்கா மாதிரி நீ இல்லை. உஷாராத்தான் இருக்கே.சந்தோஷம்!” என்றார் சுதர்ஸனம்.

” அப்பா…உங்களுக்கு எப்படி

இதெல்லாம்…?!”

” ம்.அதை விடு.நேரா இப்ப விஷயத்துக்கு வர்றேன்.நான்

ஒன்னும் காதலுக்கு எதிரியில்ல. காதல்ங்கிற பேர்ல அபத்தமான முடிவெடுத்து வாழ்க்கையை நரகமாக்கிக்கக் கூடாதுங்கிறது தான் என் கொள்கை. இதை பெரியவள் வான்மதி புரிஞ்சுக்கலை. இப்ப பிச்சைக்காரி மாதிரி

வாழ்ந்திட்டிருக்கானு அவளை

பார்த்திட்டு வந்த உன் தாய் மாமன் சொன்னதை

நீயும் தானே கேட்டே. சரி. நீ உன்

காதலனோட முகவரியை எழுதிக்கொடு.நானும் உங்கம்மாவும் அவங்க வீட்டுக்கு போயி பார்த்து தீர விசாரிச்சிட்டு எங்களுக்கு திருப்தியா இருந்தா …அந்த குடும்பம் பிடிச்சிருந்தாத்தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைப்போம்.

என்ன ஓ.கே.வா?”

உடனே ஓ.கே சொன்ன பானு

சந்தோஷமாக அவரிடமே பேப்பர் வாங்கி மாதேஷின்

முகவரியை எழுதி கொடுத்தாள்.

பின்பு அறையை விட்டு வெளியேறினாள்.

மாடிப்படிகளில் இறங்கும் போது தன் மனதில் இப்படி

சொல்லிக் கொண்டாள்.

” ஹய்யா…! அக்கா ஓடிப்போனதால என்னோட

செல்போனை பிடுங்கி வச்சிட்ட அப்பா, வேற எந்த

செல்போனையும் பயன்படுத்தக் கூடாதுனு தடை

விதிச்சிருந்தார். இப்ப லேண்ட்

லைன் போனில் நான் பேசுவதை அப்பப்ப மாடியிலிருந்து ஒட்டுக்கேட்கிறார். இதை தெரிஞ்சிட்ட நான் மாதேஷ் கூட கண்டிப்பாக பேசியது

இப்ப சக்ஸஸ் ஆகிடுச்சு.

ஹய்யா..! வெற்றி! வெற்றி!”

துள்ளிக் குதித்தபடி படிகளில் இறங்கினாள் பானு.

ஆவடி ரமேஷ்குமாரின் பிற கதைகள்:

குழந்தை

பிடிச்சிருக்கு

அப்பா எடுத்த முடிவு

நேசி

பயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *