செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை: ஆன்லைனில் 1 லட்சம் பேர் பதிவு

சென்னை, மே.17–
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பதிவு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான ‘ஆன் லைன்’ கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 1 லட்சத்து 700 மாணவர்கள் சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர்.
என்ஜினீயரிங் சேர்க்கை பதிவிற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளித்த நிலையில் முதல் வாரத்தில் 69 ஆயிரத்து 675 பேர் பதிவு செய்திருந்தனர்.
பதிவு தொடங்கிய 2 வாரங்களிலே ஒரு லட்சத்திற்கு மேல் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரி சேர்க்கைக்காக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு மேலும் உதவும் வகையில் மொத்தம் 3 வங்கியின் மூலம் பதிவு கட்டணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் பட்ட படிப்பு சேர்க்கையில் விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பப்படிவத்தை இணையதளம் வாயிலாக வருகிற 31–ந் தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதலும் www. tneaonline.in என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பதிவுக்குறித்த சந்தேகங்கள் இருப்பின் 044–2235 1014, 2235 1015 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *