செய்திகள்

எதிர்ப்பு சக்திக்கு சீரக குடிநீர்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, ஜூன் 11–

உடம்பில் எதிர்ப்பு சக்திக்கு தினமும் காலையில் சீரக குடிநீர் குடிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னையில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் அரசு கூறும் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

சித்த மருத்துவர்கள், நோய் எதிர்ப்பு சக்திக்கு சில மருத்துவத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

அதில் ஒன்று சீரக குடிநீர் ஆகும். ஒரு பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை சீரகம், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு, 1 டம்ளர் தண்ணீர். இதனை நன்றாக காய்ச்சி வடிகட்டி 5 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 நாள் தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று அமைச்சர் கூறினார்.

இரண்டாவது புதினா குடிநீர். புதினாவை நன்றாக தண்ணீரில் காய்ச்சி சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்லது.

மூன்றாவது கறுப்பு உளுந்து கஞ்சி ஆகும். கறுப்பு உளுந்து புரத சத்து நிறைந்தது. வாரம் 2 முறை கஞ்சியாக இதனை சாப்பிடலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *