செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை 

Spread the love

நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து

எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை 

கெஜ்ரிவால், மாயாவதி, அகிலேஷ் யாதவ் பங்கேற்வில்லை

புதுடெல்லி, மே 22

நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா ஊரடங்கு 4-வது கட்டமாக அமல்படுத்தப்பட்டிரு க்கிறது. கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போய்விட்டது. ஊரடங்கு காலத்தில் இடம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்தது. இது பெரும் சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, சிபிஎம், சிபிஐ, ஆர்ஜேடி, முஸ்லிம் லீக் உட்பட 18 கட்சிகளுக்கு இந்த கூட்டத்துக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இடதுசாரி தலைவர்களும் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்போம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சோனியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என கூறியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் சோனியா நடத்தும் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *