சிறுகதை

எதிரணிகள் – ராஜா செல்லமுத்து

திரைப்படத் துறையில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருக்கும் ஒரு சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்.

அப்படி தேர்தல் வந்தால் மற்ற எல்லா சங்கங்களும் சண்டை, பிரச்சனை என்று இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சங்கம் மட்டும் எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் இருந்து கொண்டிருந்தது.

ஏனென்றால் அதனுடைய நடவடிக்கை, அதனுடைய செயல்பாடு, அதனுடைய தீவிரம் எல்லாம் மற்ற உறுப்பினர்களுக்கு தெரிந்திருந்ததால் அந்த உறுப்பினர்களுக்குள் சண்டை வராமல் சுமுகமாகவே எல்லா தேர்தலிலும் நடந்து வந்தன.

ஒரு சில தேர்தல்களில் தேர்தல் நடக்காமலேயே வாக்காளர்களின் எண்ணத்தின் அடிப்படையில் தலைவர்கள், பொருளாளர், மற்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அந்த அளவிற்கு அந்த சங்கத்தின் மீது ஒரு மரியாதை, மதிப்பு இருந்தது.

ஆனால் சமீப காலங்களாக அந்த சங்கத்தின் மீது மிகுந்த ஒரு அதிருப்தி ஏற்பட்டு இருந்தது.

அடுத்த தேர்தலில் எதிரணியில் இருக்கும் பதவிக்காகப் போட்டியிடும் எதிரணி உறுப்பினர்கள் தலைவருக்காக ஆசைப்படும் அந்த உறுப்பினர்களின் செயலா? அல்லது உண்மையிலேயே அந்த இயக்கத்தில் அதாவது அந்த சங்கத்தில் முறைகேடுகள் நடந்தது உண்மையா? என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

ஆனால் செய்த தவறு, செய்யாத தவறு என்ற இருவேறு கருத்துக்களால் அந்த சங்கத்தில் பிரச்சினைகள் ஊடாடியது.

இப்போது அந்த சங்கம் இருண்டு கிடந்தது.

அப்போது அந்த சங்கத்திற்கு இந்த ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இரண்டு அணிகளும் மோதிக் கொண்டன.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவது. ஒருவரை ஒருவர் அறிக்கை விடுவது. ஒருவருக்கு ஒருவர் வீடியோ பேசியதை பதிவிடுவது. இரண்டு பேரும் எதிரும் புதிருமாக இருந்தார்கள்.

ஆனால் உறுப்பினர்களுக்கு இது தெரியவில்லை.

ஜெயித்த அந்த சங்க உறுப்பினர்கள் ஜெயிக்காத உறுப்பினர்களின் மேல் ஏறி சவாரி செய்வது போல் தான் இருந்தது அந்த செயல்.

ஒரு பக்கம் அவர்கள் அறிக்கைகள் வெளியிடுவது. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட விதிகளை மீறிய செயல்களைக் கூட அவர்கள் விட்டனர்.

இன்னொரு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அறிக்கைகளாக வெளியிட்டனர்.

இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தது உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

என்ன இது? இவ்வளவு காலமாக பிரச்சனையே இல்லாம இயங்கி வந்த நம்ம சங்கம் இப்ப பிரச்சினைக்கு உள்ளாகி விட்டது என்று வருத்தப்பட்டார்கள்.

உறுப்பினர்கள் அப்போது எந்த ஒரு சங்கத்திலும் சேராத சில பேர் நமக்கு அவங்களும் வேணும், இவங்களும் வேணும். ஆனா யாருக்கும் நம்ம பொதுவான ஆளா இருப்பாேம் என்று அந்த சங்கத்திற்கும் இன்று சங்கத்திற்கும் இடையே போய்க் கொண்டிருந்தார்கள். அந்த இரு அணியிலும் சேராத உறுப்பினர்கள்.

இரண்டு பக்கமும் போனதால் இரண்டு பக்க நடவடிக்கைகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

ஆனால் எதிர் அணியைச் சேர்ந்தவர்கள், எதிரும் புதிருமாக இருந்த போது ஒன்றே ஒன்று மட்டும் அவர்களை இணைத்தது.

அந்த உறுப்பினர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

‘மச்சி பாத்தாயா? இந்த அணியில் இருக்கிறவங்க சண்டை போடுறாங்க. அந்த அணியில் இருக்கிறவங்க சண்டை போடுறாங்க. ஆனா ரெண்டு அணியையும் சேர்த்தது எது தெரியுமா?’ என்று ஒருவர் கேட்க.

நீ‘ சொல்லும் போதே நான் புரிஞ்சுகிட்டேன். அதை நான் என் வாயில சொல்லனுமா?’ என்று அவர் சொல்ல,

இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

இந்த ரெண்டு அணியையும் சேர்த்தது ஒரே கடை பிரியாணி. என்று அந்த உறுப்பினர்கள் சொன்னபோது, எஞ்சி இருந்தவர்களும் அதை ஆமோதித்து ஆரவாரம் செய்தனர். இரண்டு எதிரிகளையும் சேர்த்து அந்த பிரியாணி ஒற்றுமையை ஏற்படுத்தி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.