செய்திகள்

உழவர் மகளிர் குழுவின் ‘நம் சந்தை’: கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்

Spread the love

வேலூர், ஜன. 21–

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விற்பனை செய்யக்கூடிய வெல்மா உணவகம், வெல்மா அங்காடி மற்றும் நம்சந்தையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார்.

இந்திய வேளாண்மை சான்றிதழ் பெற்ற இயற்கை விவசாயம் செய்யும் உழவர் மகளிர் குழுவின் மூலம் ‘நம் சந்தை’ காய்கறி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. இச்சந்தையில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முட்டைகள் விற்கப்படுகின்றன. வெல்மா அங்காடி மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான தேன், சத்துமாவு, பாக்கு தட்டு, மர பொம்மைகள், சர்ட்டுகள், லெதர் பைகள், சோப்புகள், வாஷிங் பவுடர், சாம்பிராணி, குதிரை வாலி, சாமை மற்றும் சர்பத் ஆகியவை விற்கப்படுகின்றன. வெல்மா உணவகத்தின் மூலம் தேநீர், கலவை சாதம் மற்றும் உணவுகள் விற்கப்படுகின்றன. வேலூர் அண்ணா சாலையில் உள்ள பூமாலை வளாகத்தில் ஏற்கனவே ஞாயிறுதோறும் நம்சந்தை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், உதவி திட்ட இயக்குனர்கள் ரூபன், திருவரங்கம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *