செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகள்

அமைச்சர் தங்கமணி வழங்கினார்

நாமக்கல், மே 26

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.25½ லட்சம் மானியத்தில் டிராக்டர், சுழற்கலப்பை, நுண்ணீர் பாசனக் கருவிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் -ஆலாம்பாளையத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை மற்றும் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கமணி, பள்ளிபாளையம் உழவர் உற்பத்தியாளர் குழு (கொக்கராயன்பேட்டை), (குமாரபாளையம் அக்ரஹாரம்) ஆகிய குழுக்களுக்கு கூட்டுப்பண்ணையத்திட்டத்தின் மூலம் டிராக்டர், சுழற்கலப்பை ஆகிய கருவிகளையும், 2 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திட்ட கருவிகளையும் மொத்தம் ரூ.10,49,797 மானியத்தில் வழங்கினார்.

மானியத்தில் வேளாண் இயந்திரம்

பின்னர், குமாரபாளையம் வட்டத்துக்கு உட்பட்ட எலந்தகுட்டை, காடச்சநல்லூர், ஆனங்கூர், மோடமங்கலம் அக்ரஹாரம், களியனூர், பள்ளிபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், சௌதாபுரம், படைவீடு, குமாரபாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம் அமானி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 96 பேருக்கு ரூ.19,20,000 க்கான காசோலைகளை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, திருச்செங்கோடு வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் துறையின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில், திருச்செங்கோடு உழவர் உற்பத்தியாளர் குழு (58 கைலாசம்பாளையம்), (புதுபுளியம்பட்டி) மற்றும் (ஏமப்பள்ளி) ஆகிய குழுக்களுக்கு டிராக்டர், சுழற்கலப்பை மற்றும் தீவனப்புல் நறுக்கும் இயந்திரம் ஆகியவற்றை ரூ.15 லட்சம் மானியத்தில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ப.விஜயலட்சுமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.செந்தில், நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, வேளாண்மை துணை இயக்குநர்கள் அ.நாச்சிமுத்து, கு.ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் எம்.சௌந்தர்ராஜன், செ.ஜெயமணி உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *