வாழ்வியல்

உலக வெப்ப அதிகரிப்பும் அதனுடைய விளைவும்–3

ஒரு டிகிரியில், மீச்சிறு அளவிலான வெப்ப உயர்வு கூட, மனிதர்களின் உடல்நலன், தண்ணீர் மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைப்பது உள்ளிட்டவற்றில் வித்தியாசங்களை ஏற்படுத்தும். விலங்குகள், தாவரங்கள், பவளப்பாறைகள், கடல் உயிரிகள் போன்றவற்றிலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

மேலும் பொருளாதார ரீதியில், உற்பத்தித்திறன், உணவு பாதுகாப்பு, பனிப்பாறைகள் உருகும் வேகம், தண்ணீர் வழங்கல் மற்றும் கடலோர சமூகம் என பலவற்றிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார் உலக வானிலை ஆய்வு நிறுவன துணை தலைமை செயலாளர் எலேனா மானென்கோவா.

2018-ல் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளையும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கேரளாவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஜப்பானில் நூற்றுக்கானோர் வெள்ளத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். அனல்காற்று ஸ்கேண்டிநேவியாவின் சில பகுதிகள் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பாவின் பெரும் பகுதிகளிலும் காட்டுத்தீக்கு வித்திட்டது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வடக்கு ஆர்க்டிக் பகுதியில் பலமுறை வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயர்வு ஏற்பட்டது. பின்லாந்தின் தலைநகரமான ஹெல்சின்கி 25 நாள்களுக்கு தொடர்ந்து சுமார் 25 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையை கண்டது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிகளவு காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு பலர் அமெரிக்காவில் மாண்டனர். கிரீஸிலும் காட்டுத்தீ காரணமாக மரணங்கள் ஏற்பட்டன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு நிலங்கள் எரிந்து போயின.

பருவநிலை மாற்ற விளைவுகள் தற்போது தெளிவாக தெரிகின்றன என்றும் அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ள அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *