செய்திகள்

உலக அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: தமிழக வீரர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை

சென்னை, நவ. 17-

உலக அளவில் கொலம்பியா நாட்டில் அண்மையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில் ஜூனியர் பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ஆனந்த்வேல் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடந்த, ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியில், ஜூனியர் பிரிவில், சென்னையை சேர்ந்த ஆனந்த்வேல்குமார் வெள்ளி பதக்கம் வென்றார். நேற்று கொலம்பியா நாட்டிலிருந்து சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவரது தந்தை வேல்குமார் சுப்ரமணியன், தாய் லதா ஆகியோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பூச்செண்டு பொன்னாடை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் சாமுவேல் ராஜா டேனியல், முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, வீரபத்ரன், நேரு உள்விளையாட்டரங்க மேலாளர் சுஜாதா மற்றும் விளையாட்டு சங்க பிரதிநிதிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சி மாணவர்கள் 25 பேர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிப் பதக்கம் வென்ற ஆனந்த வேல்குமார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெற்றி வீரர் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *